சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு பக்கம் #chennairains... மறு பக்கம் #தமிழகத்தில்அணைகட்டுக.. தடதடக்கும் டிவிட்டர்!

Google Oneindia Tamil News

சென்னை: இதுவரை இல்லாத அளவிற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதை தொடர்ந்து, மழை நீரை சேமிக்க #தமிழகத்தில்அணைகட்டுக என்ற ஹேஷ் டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.

தமிழகத்தில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் குறைவாக பெய்தது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 89 அணைகள், 14,098 ஏரிகள் நீரின்றி வறண்டுள்ளது. இதனால், அணைகளில் இருந்து குடிநீர் தேவைக்கு கூட தண்ணீர் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

Dam should construction in Tamil Nadu, hashtag Trent in India

போதிய அளவில், தடுப்பணைகள் இல்லாதது, நீர்நிலைகளை தூர்வாராதது மற்றும் ஆக்கிரமிப்புகளால் தான் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்று பலர் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையில், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் செய்ய தமிழக அரசு நிதி ஒதுக்கியது.

சுமார் 200 நாட்களாக மழையை காணாத பகுதியாக தலைநகர் சென்னை இருந்தது. பெயருக்கு கூட ஒரு சொட்டு தண்ணீர் விழவில்லை. இந்தநிலையில், தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனி, கே.கே.நகர், சூளைமேடு, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, போரூர் ,திருவேற்காடு, காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று வருண பகவான் கண் திறந்து பார்த்துள்ளார் என்று சொல்வது போல், மழை பெய்து, மக்கள் மனதை குளிர வைத்துள்ளது.

இதனை #chennairains என்ற ஹேஷ் டேக்கில் டிரெண்டிங் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் நெட்டிசன்கள். அதே நேரம், மீண்டும் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால், #தமிழகத்தில்அணைகட்டுக என்ற ஹேஷ் டேக்கும் டிரெண்டிங் ஆகிவருகிறது.

அதான், மாப்பிள்ளைக்கு சொந்த கார், சொந்த வீடு, அரசு வீடு இருக்கு ஏன் பொண்ணு கொடுக்கல என்று கேட்க, அதற்கு, மாப்பிள்ளை வீட்ல தண்ணீர் இல்லைணு சொல்வது போல், குமுறல்களை தெரிவிப்பது போன்று மீம்ஸ்களை போட்டுள்ளனர்.

முதலில் குதித்து விளையாடும் அளவிற்கு தண்ணீர் இருந்தது. தற்போது, லாரிகளில் குடிநீர் கொண்டு வரப்பட்டு, விநியோகிக்கும் அளவிற்கு உள்ளது. எதிர்காலத்தில் சொல்வதற்கு இல்லை என்பது போல், பதிவிடப்பட்டுள்ளது.

முதலமைச்சராக காமராஜர் இருந்த போது, அதிகபடியான அணைகள் கட்டப்பட்டன. மழை நீர் போதுமான அளவிற்கு சேகரிக்கப்பட்டது. குடிநீர் பஞ்சம் இல்லாத நிலை இருந்தது. அதன் பிறகு சொல்லும் படியாக அணைகள் கட்டப்படவில்லை என்பதை குறிக்கும் விதமாக மீம்ஸ்கள் பரவி வருகின்றன.

தண்ணீர் இல்ல.. அணை கட்டினா மட்டும் போதுமா? ஏரி குளம் தூர்வார வேணாமா? கேளுடா.. யாருகிட்ட கேட்கிற நம்ம தமிழ்நாடு அரசு தானே கேளு என்று குறிப்பிட்டுள்ளார்.

இது போன்று, தங்களின் மனதில் பட்டதையும், தாங்கள் அனுபவித்து வரும் தண்ணீர் பஞ்சத்தையும், எதிர்க்காலத்தில் தண்ணீரை சேமிக்க தேவையானவை என்னவென்று மீம்ஸ்கள், வீடியோவாக பதிவிட்டுள்ளனர்.

English summary
Trending on Twitter: Dam should construction in Tamil Nadu, hashtag Trent in India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X