சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நான் வீட்டில் இல்லாத போது என் மகள்களிடம் டான்ஸர் ரமேஷ் எப்படி நடந்து கொண்டார்? இன்பவள்ளி பேட்டி

டான்ஸர் ரமேஷ் இறப்பதற்கு முன்னர் குடிக்க காசு கொடுக்காததால் தன்னை அடித்தார் என இன்பவள்ளி தகவல்.

Google Oneindia Tamil News

சென்னை: டான்ஸர் ரமேஷ் இறப்பதற்கு முன்னர் தன்னை கடுமையாக தாக்கினார் என அவரது இரண்டாவது மனைவி இன்பவள்ளி வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் தன் மகள்களிடம் அவர் எப்படி நடந்து கொள்வார் என்பது குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.

சென்னை மூர் மார்க்கெட் பகுதியில் கூலித் தொழிலாளியாக இருந்தவர் ரமேஷ். இவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடனம் ஆடி வந்தார். பிரபுதேவா, மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்டோரின் சாயல் இவரது நடனத்தில் இருந்ததால் அவருக்கு அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் ரசிகர்களாகிவிட்டனர்.

இவர்களும் ரமேஷ் ஆடும் நடனத்தை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். அன்று முதல் இவரது வீடியோ வைரலானது. இதையடுத்து அவர் டான்ஸர் ரமேஷ் என அழைக்கப்பட்டார். டிக்டாக், இன்ஸ்டா என எங்கு சென்றாலும் அங்கு அவரது வீடியோக்கள் அதிக வியூஸை பெற்றன.

அந்த ஒரு மணி நேரம் எங்க போனீங்க? இரண்டாவது மனைவிக்கு டான்ஸர் ரமேஷின் முதல் மனைவி கேள்விஅந்த ஒரு மணி நேரம் எங்க போனீங்க? இரண்டாவது மனைவிக்கு டான்ஸர் ரமேஷின் முதல் மனைவி கேள்வி

டான்ஸர் ரமேஷ்

டான்ஸர் ரமேஷ்

டான்ஸர் ரமேஷின் முதல் மனைவி சித்ரா. இவர்களுக்கு இரு மகள்கள். ஒரு மகளுக்கு திருமணமாகிவிட்டது. அவர் கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் புளியந்தோப்பை சேர்ந்த இன்பவள்ளியுடன் ரமேஷுக்கு பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலானது. இருவரும் அவ்வப்போது தனிமையில் தங்களது காதலை வளர்த்தனர். இது தொடர்பாக சித்ரா, இன்பவள்ளி- ரமேஷிடம் சண்டையிட்டு கொண்டே இருப்பாராம்.

இன்பவள்ளியின் வீடு

இன்பவள்ளியின் வீடு

இந்த நிலையில்தான் ரமேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்பவள்ளியின் வீட்டிலிருந்து 10 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தற்கொலை அல்ல என்றும் தனது கணவரை இன்பவள்ளி ஏதோ செய்துவிட்டார் என்றும் சித்ரா புகார் கொடுத்தார். தனது கணவருக்கு வயிற்று வலி ஏற்பட்டாலே அவர் பயப்படுவார், அப்படியிருக்கும் போது அவர் எப்படி தற்கொலை செய்து கொள்வார். எனது கணவர் சாகும் போது அவரது முகத்தை கூட இன்பவள்ளி பார்க்க வரவில்லை. அவர் மாலை 4 மணிக்கு தற்கொலை செய்து கொண்டதாக கூறும் இன்பவள்ளி அவரது உடலை 5 மணிக்குத்தான் பார்த்ததாக கூறுகிறார். அப்படியென்றால் அவர் ஒரு மணி நேரம் எங்கே போயிருந்தார் என சித்ரா சரமாரியாக கேட்டார்.

நியாயம்

நியாயம்

இந்த நிலையில் இன்பவள்ளி தனது தரப்பு நியாயம் குறித்து ஒரு இதழுக்கு அளித்த பேட்டியில் எனது கணவர் மாரடைப்பால் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். 3 பெண் பிள்ளைகளுடன் கஷ்டப்பட்டு வந்தேன். இந்த நிலையில் ரமேஷ்தான் எங்களுக்கு பாதுகாப்பாக இருந்தார். அவர் டான்ஸராக புகழடைந்ததால் நான் வளைத்து போட்டேன் என அவரது குடும்பத்தினர் சொல்கிறார்கள். ஆனால் அவர் கூலி வேலை செய்து வந்த போதிலிருந்தே 20 ஆண்டுகளாக என்னோடு இருந்து வந்தார்.

20 ஆண்டுகள்

20 ஆண்டுகள்

இந்த 20 ஆண்டுகளில் அவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பும் டிக்டாக், ரீலிஸில் பிரபலமடைவதற்கு முன்பும் என் கஷ்டத்தில்தான் அவர் வாழ்ந்து வந்தார். நான் வட்டிக்கு விடும் தொழில் செய்து வருகிறேன். எனது கணவர் இறந்ததால் அவரது ஓய்வூதியம் மாதம் ரூ 3000 கிடைக்கிறது. இப்படி மாதம் ரூ 15 ஆயிரத்தில்தான் நான் என் மூன்று மகள்கள், ரமேஷ் என வாழ்ந்து வந்தோம். நான் கஷ்டத்தில் இருந்த போது கூட எங்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறாரே என நான்தான் அவருக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்தேன். உணவு கொடுத்தேன். அப்போதெல்லாம் சித்ரா அவரை கண்டுக்கவே மாட்டார். தற்போது ரமேஷுக்கு சமூகவலைதளங்கள் மூலம் வருவாய் வருகிறது. அவர் சினிமாவிலும் நடித்து வருகிறார் என்பதால்தான் ரமேஷை சித்ரா தன்னுடன் வைத்துக் கொள்ள விரும்புகிறார்.

ரமேஷ் எப்படிப்பட்டவர்

ரமேஷ் எப்படிப்பட்டவர்

ரமேஷ் எங்களுக்கு பாதுகாப்பாக இருந்தார். என் மகள்களிடம் அவர் இல்லாத போது கேட்பேன். அவர் ஏதாவது உங்களிடம் தவறாக நடந்து கொள்கிறாரா என அதற்கு என் மகள்கள் அப்படியில்லை என்பார்கள். எனது முதல் கணவர் கூட என் மகள்களை திட்டியிருக்கிறார், ஆனால் ரமேஷ் என் மகள்களை சொந்த மகள்களாகவே பார்த்தார். அவர்களிடம் தந்தையை போல் பொறுப்பாகவும் அன்பாகவும் அதே நேரம் கண்டிப்புடனும் நடந்து கொண்டார். அவரால்தான் எனக்கும் என் மகள்களுக்கும் பாதுகாப்பு. எனவே அவரிடம் இருக்கும் ஒரே கெட்டப்பழக்கம் குடிப்பழக்கம்தான். சம்பவம் நடந்த அன்று என்னிடம் குடிக்க பணம் கேட்டார். அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் குடித்தால் மேலும் உடல்நலம் கெட்டுவிடும் என்ற அக்கறையில்தான் நான் குடிக்க பணம் தர மறுத்தேன். இதனால் என்னிடம் கோபித்துக் கொண்டு ஒயின்ஷாப்பில் யாராவது நண்பர்கள் இருக்கிறார்களா என பார்த்தார். அங்கும் யாரும் இல்லை, இதனால் என்னிடம் மீண்டும் வந்து காசு கேட்டு தகராறு செய்தார். நான் காசு கொடுக்க மறுத்தேன். இதனால் என்னை கடுமையாக அடித்தார், தாக்கினார். பின்னர் என் மகள்கள் வந்து என்னை மீட்டு வேறு ஒரு அறைக்கு அழைத்து சென்றனர். குடிக்க பணம் தராவிட்டால் வழக்கமாக மாடியிலிருந்து குதித்துவிடுவேன் என மிரட்டுவார். பின்னர் அதையெல்லாம் செய்ய மாட்டார், அது போல்தான் அன்றைய தினமும் பணம் தராவிட்டால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார். இது வழக்கமானதுதானே என்பதால் நாங்கள் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. சிறிது நேரம் கழித்து அவரது குரல் கேட்கவில்லை என்பதால் எனது மகள் போய்பார்த்துவிட்டு அலறி அடித்துக் கொண்டு வந்து என்னிடம் அவர் தற்கொலை செய்து கொண்டதை சொன்னார், நான் அழுது கொண்டே போலீஸுக்கு போன் செய்தேன். இதுதான் நடந்தது. ஆனால் என் மீது அபாண்டமாக பழி போடுகிறார்கள். அவர் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்ட அவரை நான் எப்படி கொல்வேன். நன்றாக விசாரித்து பார்த்துவிட்டு, அவரது இறப்பில் எனக்கு தொடர்பிருந்தால் என்னை கட்டாயம் போலீஸ் தண்டிக்கட்டும் என இன்பவள்ளி தெரிவித்துள்ளார்.

English summary
Inbavalli second wife of Dancer Ramesh says that he severely attacked her before his death for not giving money for him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X