• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அதிமுக ஆட்சி தொடருமா, கவிழுமா.. திமுக ஆட்சியைப் பிடிக்குமா.. பரபரப்பை கூட்டிய கருத்து கணிப்பு

|

சென்னை: போற போக்கை பார்த்தால் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு ஆபத்து ஸ்லோமோஷனில் வந்து கொண்டிருப்பது போலவே ஒரு தோற்றம் ஏற்பட்டு வருகிறது!

18 பேர் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், திருவாரூரில் கருணாநிதியும், திருப்பரங்குன்றத்தில் எம்எல்ஏ போஸும் மரணம், ஓசூர் பாலகிருஷ்ணா ரெட்டி தண்டனை பெற்றது.. என ஏற்கனவே 21 தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், எப்படியாவது பெரும்பான்மையை நிரூபிக்க 8 தொகுதிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்துக்கு எடப்பாடி அரசு ஆளானது.

இதற்கு பிறகுதான் சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மரணம் நிகழ, காலியாக உள்ள மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 22 ஆகி, எடப்பாடி அரசுக்கு ஜெயித்தாக வேண்டிய நெருக்கடி 9 தொகுதிகளாக உயர்ந்துள்ளது! அதாவது ஏற்கனவே பெரும்பான்மைக்குத் தேவையான 108 எம்எல்ஏக்கள் ஆதரவு அரசுக்கு இருந்தாலும், கனகராஜ் மரணத்தினால் 109 எம்எல்ஏக்களின் ஆதரவு என்பதால் சிக்கல் பெரிதாகி உள்ளது.

ஓட்டு போட்டா போடு.. போடாட்டி போ.. வணக்கம் வைக்ககூட யோசிக்கும் வேட்பாளர்கள்.. வர வர பயம் போயிருச்சே

பெரும்பான்மை?

பெரும்பான்மை?

3 தொகுதிகள்

பெரும்பான்மை?

இதில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை என்று சொல்லி விட்டார்கள். ஆக தேர்தல் நடக்க இருப்பது வெறும் 18-ல்தான். 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடப்பதாக வைத்துக்கொண்டால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சட்டமன்றத்தில் பலம் 231 ஆக இருக்கும். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு தேவை. தற்போது அவரிடம் இருப்பது 114 எம்எல்ஏக்கள்தான்.

இடங்கள்

தற்போதைய நிலவரம்

மொத்த இடங்கள் 234

பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் தேவை

அதிமுக - 114,

திமுக - 88,

காங்கிரஸ் - 8,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1,

சபாநாயகர் - 1,

சுயேட்சை (தினகரன்) - 1

கருணாஸ், தனியரசு, அன்சாரி

கருணாஸ், தனியரசு, அன்சாரி

இதில் இரட்டை இலையில் போட்டியிட்டு எம்எல்ஏக்களாகி உள்ள தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி இவர்களின் நிலைப்பாடு தெரியவில்லை. ஒருவேளை எடப்பாடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கொண்டு வந்துவிட்டால், இந்த 3 பேரும் தங்கள் பதவியை பற்றி யோசிக்காமல் வாக்களித்தால் எடப்பாடிக்கு ஆதரவளிக்கலாம். ஒருவேளை பதவிதான் முக்கியம் என்று நினைத்தால் எடப்பாடிக்கு எதிராகதான் ஓட்டு போடுவார்கள்.

தினகரன் எம்எல்ஏக்கள்

தினகரன் எம்எல்ஏக்கள்

இதேபோலதான் தினகரனிடம் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் உள்ளனர். அவர்கள் தங்கள் பதவி பறிபோனாலும் பரவாயில்லை என்றால், எடப்பாடிக்கு எதிராகத்தான் ஓட்டுப்போட முடியும். அதனால் இந்த 6 எம்எல்ஏக்கள் என்ன முடிவினை எடுக்க போகிறார்கள் என்பதும் பெரிய ட்விஸ்ட்தான்! ஒருவேளை இதில் 6 பேருமே எடப்பாடிக்கு ஆதரவு என்றால் எடப்பாடியை கையிலேயே பிடிக்க முடியாது!

திமுக முனைப்பு

திமுக முனைப்பு

இப்போது நிலைமை எப்படி உள்ளதென்றால், ஒருவேளை இந்த 18 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றால் திமுக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளது. அதனால்தான் எப்படியாவது 18 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்று திமுக முனைப்பு காட்டி வருகிறது.

எகிறும் பிரஷர்

எகிறும் பிரஷர்

இதை அறிந்த அதிமுகவுக்கோ, குறைந்தது 10 இடங்களிலாவது வெல்ல வேண்டும் என்ற பிரஷர் எகிறி உள்ளது. சுருக்கமாக சொல்ல போனால், இந்த இடைத்தேர்தல் அதிமுக-திமுக நேரடியாக மோதும் தேர்தல்.. யார் ஆட்சியை பிடிப்பது என்பதற்கான தேர்தல்! அதனால்தான் கூட்டணி கட்சியை கிட்டகூட இந்த இரு கட்சிகளும் சேர்த்து கொள்ளவும் இல்லை. தொகுதிகளை ஒதுக்கவும் தயாராக இல்லை.

ஆட்டம் காண்கிறது

ஆட்டம் காண்கிறது

இதனிடையே ஆங்காங்கே நடத்தப்பட்டு வரும் கருத்துக் கணிப்பில் அதிமுகவுக்கு சில தொகுதிகளில் சரிவு என்று வந்து கொண்டிருப்பது அக்கட்சியை தலைமையை மேலும் ஆட்டம் காண வைத்துள்ளது. அதனால்தான் எம்பி தேர்தலை விட எம்எல்ஏ தொகுதிக்கான இடைத்தேர்தல் மீதே அதிக கவனம் செலுத்துகிறாராம் எடப்பாடி.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
The ADMK is in the crisis to win atleast 10 seats in the by-elections for 18 constituencies.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more