சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா? தமிழக-பாஜகவின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடுகளை அறிவிக்கதான்!

கூட்டணி பேச்சுவார்த்தை ரகசியமாக நடந்து வருகிறது என்று துணை முதல்வர் சொல்லி இருந்தார். ஆனால் பியூஷ் கோயல் நேற்று முன்தினம் சென்னை வந்தபோதே, ரகசியம் எல்லாம் அதிகாரப்பூர்வமாக நடக்க ஆரம்பித்து விட்டது.

பாஜக மேலிட பொறுப்பாளராக அவர் இருப்பதால், அவரது வருகை ரொம்பவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

 மீண்டும் பேச்சுவார்த்தை

மீண்டும் பேச்சுவார்த்தை

அவருடன் அதிமுகவின் தேர்தல் குழு பேச்சுவார்த்தை நடத்தவும் தமிழ்நாடே பரபரப்பாகி விட்டது. ஒரு ரவுண்டு பேச்சுவார்த்தை அப்போது முடிந்தாலும், இன்னும் ஓரிரு நாளில் திரும்பவும் இரு கட்சி தலைவர்களும் கூடி பேச போகிறார்கள்.

கூட்டணி கட்சிகள்

கூட்டணி கட்சிகள்

இப்போதைக்கு அதிமுக 25 தொகுதிகளிலும் பாஜக 15 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்தது போக அதிமுக 22 தொகுதிகளிலும் பாஜக 7 தொகுதிகளிலும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

செவ்வாய்க்கிழமை

செவ்வாய்க்கிழமை

ஆனாலும் இறுதி கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து அறிவிக்கப்படும். அநேகமாக வருகிற 19-ந்தேதி அதாவது செவ்வாய்க்கிழமை நல்ல நாள் என்பதால் அன்றைய நாளிலேயே தொகுதி பங்கீடு விவகாரங்களை வெளியிடலாமா என அதிமுக வட்டாரத்தில் யோசித்து வருகிறார்களாம்.

மாசி பவுர்ணமி

மாசி பவுர்ணமி

அன்று மாசி பவுர்ணமி என்பதால், அந்நாளிலேயே பங்கீட்டு விவரங்களை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாம்.
அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகுதான், பிரச்சார பணி முழுவீச்சில் சும்மா றெக்கை கட்டி பறக்கும் என தெரிகிறது.

English summary
On Tuesday, the AIADMK-BJP seems to announce the seat sharing
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X