மகளின் வாழ்க்கை வீணா போகுது.. மனைவியிடம் இருந்து மீட்டுக்கொடுங்கள் - தாடி பாலாஜி வேதனை
சென்னை: தனது மகளை, தன் மனைவியிடம் இருந்து மீட்டு தருமாறு தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் நடிகர் தாடி பாலாஜி கோரிக்கை மனு அளித்துள்ளார். மகளின் எதிர்காலத்தை கெடுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் என்னை பற்றி தவறாக பேச வைப்பதாகவும் தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.
நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்தியாவிற்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். மனைவி நித்தியாவை சமாதான படுத்த வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சில் கலந்து கொண்டார் தாடி பாலாஜி.
முதலில் இவர்கள் சமாதானம் ஆனது போல் தெரிந்தாலும், பின்னர் விவாகரத்து முடிவில் தெளிவாக உள்ளதாக நித்யா தெரிவித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
அண்ணாமலைக்கு வேலையில்லை.. மின் ஊழியர்கள் “ஏதாவது” வாங்கினால் நடவடிக்கை.. அமைச்சர் செந்தில் பாலாஜி..!

தாடி பாலாஜி பிரச்சினை
பாலாஜி மீண்டும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து கலாட்டா செய்கிறார் என்றும் குடிபோதையில் வந்து வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைப்பதாகவும், செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுக்கிறார் என்றும் நித்யா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

தாடி பாலாஜி மகள்
இவர்களுக்கு போஷிகா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. 12 வயதான போர்ஷிகா நித்தியாவிடம் வளர்ந்து வருகிறார். அவ்வப்போது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவார் நித்யா. தாடி பாலாஜியும் நித்யாவும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கொடுத்து கொண்டே உள்ளனர்.

பிக்பாஸ் அல்டிமேட்
இருவருக்கும் இடையே பிரச்சனை தொடர்ந்து வந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்சிக்கு சென்ற தாடி பாலாஜி, தனது மனைவி நித்யா பற்றி கருத்து தெரிவித்துள்ளார், இதற்கு பதில் அளிக்கும் வகையில் சமூகவலை தளத்தில் புகார் தெரிவித்திருந்தார் நித்யா, அதில் தன்னை பற்றி தேவையில்லாத கருத்துகளை தாடி பாலாஜி தெரிவிப்பதாக குற்றம்சாட்டினார். இனிமேலும் தன்னை பற்றி தவறாக பேசினால், தாடி பாலாஜி தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திட்டிய ஆடியோவை வெளியிடுவேன் என எச்சரித்திருந்தார்.

மனைவி மீது புகார்
இந்த நிலையில் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வரும் அவரது மகள், மனைவி நித்யாவின் தவறான வழிகாட்டுதலால் சமூக வலைதளத்தில் காணொலி பதிவிடுவதாகவும், இதனால் அவரது படிப்பு பாதிக்கப்படுவதாகவும் புகார் கூறியுள்ள தாடி பாலாஜி, நித்யாவை பற்றி தனக்கு எந்த கவலையும் இல்லை. அவர் வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளட்டும். ஆனால் என் மகளின் வாழ்க்கை வீணாவதை தன்னால் பார்த்து கொண்டிருக்க முடியாது என்று கூறினார். மகளை, மனைவி நித்யாவிடமிருந்து மீட்டு தருமாறு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் மனு அளித்திருக்கிறார்.

மகள் வாழ்க்கை முக்கியம்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நானும் என் மனைவியும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்ததாகவும், மகள் போஷிகா மனைவி பராமரிப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார் சமீபகாலமாக மகளை பள்ளிக்கு சரியாக போக விடாமலும் தவறான வழிகாட்டுதலால் தன் மகளை மிரட்டி தன்னிடம் பணம் பறிக்கும் முயற்சியில் மனைவி நித்யா ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் மகளின் எதிர்காலத்தை கெடுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் என்னை பற்றி தவறாக பேச வைப்பதாகவும் தெரிவித்தார். எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாடி பாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார்.