சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போனில் பேசிய ஸ்டாலின்.. உடனே ரத்து செய்த தெற்கு ரயில்வே மேலாளர்.. தயாநிதி மாறன் பரபரப்பு தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியை திணிக்கும் சுற்றறிக்கை வாபஸ்: தெற்கு ரயில்வே பணிந்தது!

    சென்னை: ஆங்கிலம், இந்தி மொழி மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ரயில்வே உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. அப்போது தெற்கு ரயில்வே பொதுமேலாளரை சந்தித்த பின் பேட்டி அளித்த தயாநிதி மாறன் எம்பி, ஆங்கிலம் இந்தியை பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கையை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது என்றார்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரு பயணிகள் ஒரே பாதையில் சென்றதால் பெரும் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இரு ஸ்டேசன் மாஸ்டர்களுக்கும் ஏற்பட்ட மொழிப்பிரச்னை தான் காரணம் என தெரியவந்தது.

    இதையடுத்து தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர்கள், ரயில் இயக்குபவர்கள் உள்பட ரயில் இயக்க பணியாளர்கள் அனைவரும் அலுவல் சார்ந்த பணிகளுக்கு இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்றும் தமிழில் எக்காரணம் கொண்டும் பேசவேண்டாம் என்றும் தெற்கு ரயில்வே நேற்று சுற்றறிக்கை அனுப்பியது

    தயாநிதிமாறனையே முன்வைத்து இந்தி திணிப்பு உத்தரவு வாபஸ்- 'நச்' ஸ்கோர் செய்த ஸ்டாலின்! தயாநிதிமாறனையே முன்வைத்து இந்தி திணிப்பு உத்தரவு வாபஸ்- 'நச்' ஸ்கோர் செய்த ஸ்டாலின்!

    தெற்கு ரயில்வே உறுதி

    தெற்கு ரயில்வே உறுதி

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர், சென்னை சென்டரில் உள்ள தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தை திமுக எம்பி தயாநிதி மாறன் மற்றும் திமுக மாநிலங்களவை எம்பி ஆர்எஸ் பாரதி ஆகியார் தலைமையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன்பின்னர் தெற்கு ரயில்வே பொதுமேலாளரை சந்தித்து மனு அளிப்பதற்காக ரயில்வே அலுவலகத்திற்கு தயாநிதிமாறன் எம்பி உள்ளே சென்றார். அவரிடம் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் எந்த மொழியிலும் பேசலாம் என உறுதி அளித்தார்.

    தெற்கு ரயில்வே உறுதி

    தெற்கு ரயில்வே உறுதி

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர், சென்னை சென்டரில் உள்ள தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தை திமுக எம்பி தயாநிதி மாறன் மற்றும் திமுக மாநிலங்களவை எம்பி ஆர்எஸ் பாரதி ஆகியோர் தலைமையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன்பின்னர் தெற்கு ரயில்வே பொதுமேலாளரை சந்தித்து மனு அளிப்பதற்காக ரயில்வே அலுவலகத்திற்கு தயாநிதிமாறன் எம்பி உள்ளே சென்றார். அவரிடம் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் எந்த மொழியிலும் பேசலாம் என உறுதி அளித்தார்.

    இந்தி திணிப்பு முயற்சி

    இந்தி திணிப்பு முயற்சி

    இதன்பின்னர் வெளியே வந்த தயாநிதி மாறன். செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஆங்கிலம் இந்தியை பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கை இந்தியை மறைமுகமாக திணிக்கும் முயற்சியா என்ற சந்தேகம் எழுந்தது.

    தயாநிதி மாறன் பேட்டி

    தயாநிதி மாறன் பேட்டி

    இதையடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் உடனடியாக மத்திய சென்னை எம்பி, மற்றும் ராஜ்யசபா எம்பி ஆர்எஸ்பாரதி மற்றும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் சென்று நேரடியாக தெற்கு ரயில்வே பொதுமேலாளரை சந்தித்து, இதற்கு ஒரு நல்ல முடிவினை கொண்டுவர வேண்டும் என உத்தரவிட்டார்.

    ஸ்டாலின் பேச்சு

    ஸ்டாலின் பேச்சு

    அதன்படி நாங்கள் இவ்வாறு இந்தியை திணிக்கின்ற முயற்சியில் ஈடுபடாதீர்கள்.ஏற்கனவே இருந்த முறையை அமல்படுத்த வேண்டும் என்று சொன்னோம். அப்போது நாங்கள் பேசியபோது, தலைவர் முகஸ்டாலினும் தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் தொலைப்பேசியிலே பேசினார்கள்.

    போராடும் முடிவு

    போராடும் முடிவு

    எங்கள் கோரிக்கையை ஏற்று அந்த ஆங்கிலம் மற்றும இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்ற சுற்றறிக்கையை நாங்கள் ரத்து செய்கிறோம் என்று எங்கள் முன்னாலயே பொதுமேலாளர் உறுதி அளித்தார். அதேபோல் முன்பு இருந்ததைப்போல் பிராந்திய மொழிகளை பயன்படுத்தலாம் என்றார். இதன் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு நல்ல தீர்வினை கொண்டுவந்துள்ளார். முன்னதாக இந்த உத்தரவை பிறப்பிக்கும் வரை இங்கிருந்து போராடுவது என்ற முடிவோடு தான் வந்தோம். ஆனால் அதற்கு வாய்ப்பு அளிக்காமல் எங்கள் முன்னிலையிலேயே உத்தரவை ரத்து செய்தார்" இவ்வாறு கூறினார்.

    English summary
    dayanthi maran tell press conference, cancel the announcement of english and hindi only after mk stalin spoken with southern railway head
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X