சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக கவனஈர்ப்பு தீர்மானம்... அணை பாதுகாப்பு மசோதா தொடர்பாக சட்டசபையில் விவாதம்

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள அணை பாதுகாப்பு மசோதாவின் மூலம் மாநில அரசின் உரிமைகளை மாநில அரசு பறிக்க முயல்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சட்டசபையில், திமுக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.

டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மக்களவையில் 'அணை பாதுகாப்பு மசோதா 2019' அறிமுகம் செய்து சட்டமாக நிறைவேற்றுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, மக்களவையில் தமிழக எம்.பிக்கள் பேசினர்.

Dam safety bill brought by the central government, Tamil nadu Opposition

இந்தநிலையில, அணை பாதுகாப்பு மசோதா தொடர்பாக, தமிழக சட்டசபையில் இன்று திமுக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி. அணை பாதுகாப்பு மசோதா தமிழக்திற்கு ஏற்புடையது அல்ல. மசோதாவை திரும்ப பெற பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளோம் என்றார்.

அதிமுகவுக்கு அதிமுகவுக்கு "மாம்பழம்" இனிக்குது.. "முரசு" மட்டும் கசக்குதோ.. விசனத்தில் "கேப்டன்" கட்சி..!

தமிழ்நாட்டுக்கு சொந்தமான முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், துன்னகடவு, பெருவரிப்பள்ளம் ஆகிய 4 அணைகள் கேரளாவில் உள்ளன. மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்த 4 அணைகளையும் தமிழக அரசு பராமரித்து வருகிறது. நான்கு அணைகள் மீதான தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட தமிழக அரசு குரல் கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் கழிவுநீரை குடிநீராக்க அரசு கொள்கை முடிவு எடுக்க உள்ளதாகவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்காக மத்திய அரசுடன் மாநில அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

நீர் மேலாண்மையை மேம்படுத்த மாவட்டங்கள் வாரியாக ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும். மழை நீரை சேகரிக்க விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார். நீர் வளத்தை மேம்படுத்த நடந்தாய் வாழி காவிரி திட்டம் தொடங்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

English summary
Dam safety bill brought by the central government, Tamil nadu Opposition
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X