கவனம்.. கிரெடிட், டெபிட் கார்ட்.. ஆட்டோ பேமெண்ட் விதிகளை அதிரடியாக மாற்றிய ஆர்பிஐ.. ரொம்ப முக்கியம்!
சென்னை: கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் ஆட்டோ பேமெண்ட் விதிகளில் சில முக்கியமான மாற்றங்களை ஆர்பிஐ மேற்கொண்டுள்ளது.
ஆர்பிஐ சார்பாக இரண்டு மாதத்தில் இரண்டாவது முறையாக ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் ரெப்போ விகிதம் 0.40 சதவிகிதம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று இருநாள் நாணய கொள்கை கூட்டம் முடிந்த பின் பேசிய ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ரெப்போ விகிதம் 0.50 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிற்க முடியாது.. ஆர்பிஐ ஊழியர்கள் அடாவடி.. விரைவில் பாயும் போலீஸ் ஆக்சன்

ரெப்போ விகிதம்
இதனால் ரெப்போ விகிதம் 4.90% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அதே சமயம் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல முறை ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டது. இதனால் ரெப்போ விகிதம் இன்னும் கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டிலேயே உள்ளது என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இன்று பேசிய ஆர்பிஐ கவர்னர் வேறு சில முக்கியமான அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதன்படி, கிரெடிட், டெபிட் கார்ட் மூலம் செலுத்தப்படும் ஆட்டோ கட்டணங்களின் அதிகபட்ச தொகையை ஆர்பிஐ மாற்றி உள்ளது.

ஆட்டோ பேமெண்ட்
கிரெடிட் கார்டுகளில் ஆட்டோ பேமெண்ட் வசதி இருக்கும். அதேபோல் டெபிட் கார்டுகளிலும் ஆட்டோ பேமெண்ட், வாலட் வசதிகள் இருக்கும். தற்போது மக்கள் பயன்படுத்தும் ஓடிடி தளங்கள், டேட்டிங் தளங்கள், பல்வேறு பில் பேமெண்ட் சேவைகள், அத்தியாவசிய சேவைகள் பல இந்த ஆட்டோ பேமெண்ட் வசதியை பயன்படுத்தியது. இதற்கு இ mandate ல் நீங்கள் அனுமதி தர வேண்டும். கிரெடிட் கார்ட் பில்லிங்கில் ஆட்டோ டிடெக்சன் கொடுத்திருந்தாலும், அதில் ஆட்டோ பேமெண்ட் நடக்கும்.

அதிகபட்சம் எவ்வளவு
ஆனால் இதற்கு உட்சபட்ச தொகையாக 5000 ரூபாய் மட்டுமே இருந்தது. அதாவது அதிகபட்ச ஆட்டோ பேமெண்ட் 5000 ரூபாய்க்கு மேல் போகாது. அதற்கு மேல் செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஓடிபி கொடுக்க வேண்டும். வாடிக்கையாளரிடம் ஓடிபி அனுமதி பெற்றால் மட்டுமே 5000 ரூபாய்க்கு மேல் ஆட்டோ பேமெண்ட் செய்யலாம் என்ற வசதி இருந்தது. தேவை இல்லாத சேவைகளுக்கு இது ஒரு வகையில் கிரெடிட், டெபிட் கார்ட் பயனாளிகளுக்கு பாதுகாப்பு அளித்தது.

மாற்றம்
ஒரே மாதத்தில் ஆட்டோ பேமெண்டில் பல ஆயிரங்களை இழக்காமல் இருக்கும் பாதுகாப்பை அளித்தது. தற்போது இந்த உச்ச வரம்பு 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 15 ஆயிரம் அளவிலான பெரிய தொகைகளை ஓடிபி இல்லாமல் ஆட்டோ பேமெண்ட்டாக செலுத்த முடியும். அதாவது 15 ஆயிரம் வரை கூட உங்கள் கிரெடிட் கார்டில் இருந்து ஆட்டோ பேமெண்டிற்காக பணம் எடுக்கப்பட முடியும். இதற்கு ஒரு முறை இ mandate செய்தால் போதும். ஒவ்வொரு முறையும் ஓடிபி கொடுக்க வேண்டியது இல்லை.
இதனால் இன்சூரன்ஸ் பேமெண்ட் போன்றவர்களை எளிதாக இனி மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.