சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழனின் தலையில் கடன் சுமை : எதற்காகக் கடன் வாங்கினார்கள்? என்ன செலவு? கேட்கிறார் கமல்ஹாசன்

எதற்காகக் கடன் வாங்கினார்கள்? என்ன விதத்தில் செலவு செய்தார்கள்? இத்தனை லட்சக்கணக்கான கோடிகளில் மக்களுக்கு ஓரிரு துளியேனும் சென்று சேர்ந்ததா? எதற்கேனும் கணக்கு உண்டா?

Google Oneindia Tamil News

சென்னை: ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 65,000 ரூபாய் கடன் சுமை இருக்கிறது. எதற்காகக் கடன் வாங்கினார்கள்? என்ன விதத்தில் செலவு செய்தார்கள்? இத்தனை லட்சக்கணக்கான கோடிகளில் மக்களுக்கு ஓரிரு துளியேனும் சென்று சேர்ந்ததா? எதற்கேனும் கணக்கு உண்டா? என்று மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டசபையில் 22ஆம் தேதியன்று பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம், 2021-2022-ஆம் ஆண்டு மாநில கடன் சுமார் 5.7 லட்சம் கோடி ரூபாயாக இருக்க வாய்ப்பிருக்கிறது என தெரிவித்தார்.

Debt burden on the heads of Tamils: Kamal haasan tweet post

இது தமிழக மக்களை தொகை அடிப்படையில், ஒவ்வொருவரின் மீதும் தலா 65 ஆயிரம் ரூபாய் கடன் சுமை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார்.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு காவல்துறை உயரதிகாரி பாலியல் தொல்லை - முதல்வர் நடவடிக்கை எடுக்க கமல் ட்வீட்பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு காவல்துறை உயரதிகாரி பாலியல் தொல்லை - முதல்வர் நடவடிக்கை எடுக்க கமல் ட்வீட்

இந்த கடன் சுமை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று - தமிழக அரசு வாங்கியிருக்கும் கடன்களைப் பற்றிய வெள்ளை அறிக்கை வேண்டும் என்பது. இப்போது அரசின் செய்திக் குறிப்பின்படியே, ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 65,000 ரூபாய் கடன் சுமை இருக்கிறது என்று கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எதற்காகக் கடன் வாங்கினார்கள்? என்ன விதத்தில் செலவு செய்தார்கள்? இத்தனை லட்சக்கணக்கான கோடிகளில் மக்களுக்கு ஓரிரு துளியேனும் சென்று சேர்ந்ததா? எதற்கேனும் கணக்கு உண்டா? . தேர்தலுக்கு முன்னதாக இக்கடன்களைப் பற்றிய முழுமையான அறிக்கை வந்தே தீரவேண்டும் என்றும் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

English summary
Every Tamil has a debt burden of 65,000 rupees on his head. What did they borrow for? In what way did they spend? Did one or two drops go to millions of crores of people? Do you have an account for anything? People's Justice Center party leader Kamal Haasan has questioned that.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X