சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கழகங்களை அகற்றுவோம்.. கமல்ஹாசன் அதிரடி அரைகூவல்.. கடன் சுமை பற்றி காட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: கடன் சுமையை அதிகரித்த கழகங்களை அகற்றுவோம் என்று, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் அரைகூவல் விடுத்துள்ளார்.

தமிழக சட்டசபையில் 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அப்போது தமிழகத்திலுள்ள ஒவ்வொருவர தலையிலும், சுமார் ரூ.57,000 கடன் இருக்கும் தகவல் வெளியானது.

Debt load increasing in Tamilnadu, says Kamal Haasan

இந்த நிலையில், கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: தமிழகத்தின் ஆண், பெண் குழந்தைகள் மற்றும் இனி பிறக்கவிருக்கும் பிள்ளைகள் என ஒவ்வொருவரின் தலையிலும் சுமார் ரூ.57,000/ரூபாய் கடன் சுமை, இன்றைய தேதி வரை ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்.. தமிழகத்தில் 6.13 கோடி வாக்காளர்கள்! சோழிங்கநல்லூருக்கு முதலிடம்வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்.. தமிழகத்தில் 6.13 கோடி வாக்காளர்கள்! சோழிங்கநல்லூருக்கு முதலிடம்

இதன் முக்கிய காரணங்கள், மாறி மாறி சுரண்டி வரும் இரு கழகங்களே. இவர்களை அகற்றுவோம். தமிழக வருமானத்தைக் கூட்டுவோம்.
கடனில்லாத் தமிழகத்தை உருவாக்குவோம். மக்கள் கைகோர்த்தால் நீதி கிடைக்கும். இவ்வாறு மக்கள் நீதி மய்யம் கட்சியின் கருத்தை கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும்தான், கமல்ஹாசன், கழகங்கள் என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், இவ்விரு கட்சிகளுடனும் வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி இல்லை என்பது மீண்டும் அவரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கழகங்கள் இல்லாத தமிழகம் என்பதுதான், மக்கள் நலக் கூட்டணி, பாஜக போன்றவற்றின் கோஷமாக கடந்த காலங்களில் இருந்தது. ஆனால், மக்கள் நல கூட்டணி கலைக்கப்பட்டு, அதில் இருந்த கட்சிகள் இப்போது திமுகவுடன் கூட்டணியில் உள்ளன. பாஜகவோ, அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆக மொத்தம், கழகங்களை எதிர்த்த கட்சிகள் எல்லாமே கழகங்களின் தயவோடுதான் நடைபோடுகின்றன.

இந்த நிலையில் கமல்ஹாசன், தனது சொல்லை நிகழ்த்திக் காட்டுவாரா, அதற்கு தமிழக சூழல் தயாராக இருக்கிறதா என்பதெல்லாம் இனி வரும் காலங்களில் தெளிவாக தெரியப்போகிறது.

English summary
Debt load has been increasing in Tamilnadu we need to remove DMK AIADMK parties from the ruling, says kamal Haasan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X