சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

600 க்கும் அதிகமான ஆசிரியர்களை இடைநீக்கம் செய்ய முடிவு... பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆசிரியர்கள் போராட்டம்- வீடியோ

    சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டு நேற்று ரிமாண்டில் வைக்கப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

    ஏற்கனவே 400க்கும் மேற்பட்டோர் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் மேலும் 600க்கும் மேற்பட்டோரை இடைநீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    Decided to suspend more than 600 teachers

    சென்னையில் பணியாற்றும் ஆசிரியர்கள் காலை 10 மணிக்குள் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டது. பணிக்கு திரும்பாவிட்டால் தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்படுவர் என்று முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்திருந்தார். அதே நேரம், சென்னையில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக 2000 பேர் காத்து இருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.

    மேலும், பல மாவட்டங்களில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஏனநல்லூர் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஆசிரியர்கள் யாரும் வரவில்லை.கடந்த ஒரு வாரம் பள்ளி இயங்காததால், ஓய்வு பெற்ற ஆசிரியரை கொண்டு கிராமமக்களே பாடம் நடத்தினர். சத்துணவு பணியாளர்களும் பணிக்கு வராததால், மாணவர்களுக்கு வீட்டிலிருந்து உணவு எடுத்து வந்து கிராம மக்கள் பரிமாறினர்.

    English summary
    Department of School Education Decided to dismiss more than 600 teachers
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X