சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் எதிர்ப்பு - சட்ட போராட்டம் நடத்த ஆலோசனை

நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சட்டப்போராட்டம் நடத்த ஆலோசனை நடத்தினர்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் உத்தரவினை அடுத்து போலீஸ் பாதுகாப்புடன் ஏராளமான பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர். இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சட்டப்போராட்டம் நடத்த ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மூலவரான நடராஜருக்கு அருகில் உள்ள கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி கும்பிடுவது தொன்று தொட்டு வழக்கம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டபோது கனகசபை மீது ஏறி யாரும் சாமி தரிசனம் செய்யக்கூடாது என கோயில் தீட்சிதர்கள் அறிவித்திருந்தனர். ஆனால் கொரோனா தொற்று குறைந்த பிறகும் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு பக்தர்களை தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து சிதம்பரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பக்தர்களை அனுமதிக்க கோரி வழக்கு தொடர்ந்தார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அரசாணை...தமிழக அரசு அதிரடி சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அரசாணை...தமிழக அரசு அதிரடி

தமிழக அரசு அரசாணை

தமிழக அரசு அரசாணை

அந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், தமிழக அரசு இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யலாம் என தமிழக அரசு நேற்று அரசாணை பிறப்பித்தது.

உடனடி அமல்

உடனடி அமல்

இதையடுத்து அவசர ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங், கோட்டாட்சியர் ரவி, கடலூர் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அசோக்குமார், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் பங்கேற்றனர். அரசாணையை உடனே அமல்படுத்துவதற்கு கால அவகாசம் தேவை என தீட்சிதர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங், கால அவகாசம் எதுவும் கொடுக்க முடியாது எனக்கூறி விட்டனர்.

கனகசபை மீது ஏறி தரிசனம்

கனகசபை மீது ஏறி தரிசனம்

இந்நிலையில் நேற்று மாலை நடராஜர் கோயிலில் பக்தர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்தனர். ஏற்கெனவே கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்திய தெய்வத் தமிழ் பேரவை, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பக்தர்களோடு சென்று கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உள்ளிட்டோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தீட்சிதர்கள் எதிர்ப்பு

தீட்சிதர்கள் எதிர்ப்பு

அப்போது கோயில் தீட்சிதர்கள் சார்பில் வழக்கறிஞர் சந்திரசேகர் போலீசாரிடம், தங்களது கருத்துக்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கடிதம் அளித்தார். இதையடுத்து பக்தர்கள் கனகசபைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தனர்.

 பக்தர்கள் வரவேற்பு

பக்தர்கள் வரவேற்பு

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பக்தர்கள் மற்றும் தமிழ் அமைப்பினர், 'சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்திரவுபடியும், பக்தர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் அடிப்படையிலும் நடராசர் கோயிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதன்படி இன்று சாமி தரிசனம் செய்தோம். தீட்சிதர்கள் தங்களது தரப்பு விளக்கத்தை அளித்தார்கள். அது அவர்களது உரிமை. அதே நேரத்தில் இந்த வழிபாட்டு உரிமை தொடர்ந்து நடந்திட தமிழக அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.

தீட்சிதர்கள் சட்டப்போராட்டம்

தீட்சிதர்கள் சட்டப்போராட்டம்

உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த, சிதம்பரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் கூறுகையில், கனகசபையில் ஏறி பக்தர்கள் வழிபடலாம் என அரசாணை பிறப்பித்து இருப்பது வரவேற்கத்தக்கது என்றார். சிதம்பரம் கீழ சன்னதி அருகில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர். தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறுகையில், மற்ற தீட்சிதர்களிடம் ஆலோசித்து, சட்ட ஆலோசனையை பெற்று கருத்து தெரிவிக்கப்படும் என்றார்.

English summary
Chidambaram natarajar temple kanagasabai dharisanam: (சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை தரிசனம்)Following the order of the Tamil Nadu government, a large number of devotees with police protection climbed on the Kanakasabai and performed Sami darshan. The Deekchithar‬ have strongly objected to this and are planning to hold a legal battle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X