சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தலைவி படத்திற்கு தடை விதிங்க.. ஹைகோர்ட்டில் தீபா வழக்கு

Google Oneindia Tamil News

சென்னை: தனது அனுமதியில்லாமல், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று வைத்து எடுக்கப்பட்ட தலைவி படத்தை வெளியிட தடை விதிக்க கோரி தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் தமிழிலும், ஜெயா என்ற பெயரில் ஹிந்தியிலும் இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கி வருகிறார்.

deepa asks hc to stay bio pics on jayalalitha

இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதே போல் கெளதவ் வாசுதேவ்மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக தயாரிக்க இருப்பதாகவும் அதில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன் அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், ஜெயலலிதாவின் வாழ்க்கையில் விவரங்கள் தனக்கு தெரியும் என்றும் தனது வாழ்க்கையை சேர்க்காமல் திரைப்படத்தை, இணையதள தொடரை எடுக்க அனுமதிக்க முடியாது என்றும் இந்த கதையில் தங்களது குடும்ப அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்படலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணை வர உள்ளது.

English summary
J Deepa has filed a petition in the Madras HC Seeting a stay on bio pics on late leader Jayalalitha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X