சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்க "தல" தில்லை பார்த்தீங்களா.. லோக்சபா, சட்டசபை இடைத்தேர்தலில் தீபா தனித்து போட்டியாம்!

எம்பி தேர்தல், இடைத்தேர்தல் இரண்டிலும் தீபா தனித்து போட்டி என அறிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    J Deepa: நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டி- ஜெ.தீபா அறிவிப்பு- வீடியோ

    சென்னை: வரவிருக்கும் எம்பி தேர்தல், மற்றும் 18 இடைத்தேர்தல் என இரண்டிலுமே போட்டியிட போவதாக ஜெ. தீபா இன்று அறிவித்துள்ளார்.

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகளின் கீழ் ஏராளமான கட்சிகள் கூட்டணி வைத்து இணைந்துள்ளன. அந்த கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடுகள், வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் இறுதி கட்டத்தில் உள்ளன.

    Deepa Contest in MP and By Elections

    மற்றொரு பக்கம் தினகரன், சீமான், கமல் என இவர்கள் ஒரு பக்கம் தனித்தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். ஆக மொத்தம் வரும் தேர்தலில் 5 முனை போட்டி உறுதியாகியுள்ளது.

    Deepa Contest in MP and By Elections

    உங்கள் அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானம் இது.. எப்படித் துடைக்கப் போறீங்க சாமி.. கமல் கேள்வி உங்கள் அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானம் இது.. எப்படித் துடைக்கப் போறீங்க சாமி.. கமல் கேள்வி

    ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தார். இதனால் அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றே எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

    [ஒட்டு மொத்த நாடும் ஒற்றை விரலுடன்.. லோக்சபா தேர்தல் 2019]

    இந்நிலையில், இன்று திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், 40 தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல்களில் தனித்து போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் சொல்லி இருப்பதாவது:

    "மக்களவை மற்றும் 18 சட்டப் பேரவைத் தேர்தலில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 16, 17 தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கட்சி அலுவலகத்துக்கு வழங்கலாம்" என கேட்டுக் கொண்டுள்ளார்.

    English summary
    J Deepa contest alone in 40 Constitutions in MP election and 18 constitutions in By election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X