சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..!

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமியின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது

Google Oneindia Tamil News

Recommended Video

    NTK Deepa Nomination | ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..!- வீடியோ

    சென்னை: ஒரு பிரச்சனையும் இல்லை.. ஒரு விவகாரமும் இல்லை.. ஒரு புகாரும் இல்லை.. அதனால்தான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமியின் மனு எடுத்த எடுப்பிலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.

    வரும் 5-ம் தேதி வேலூரில் தேர்தல் நடக்க உள்ளது. இதில் அதிமுக, திமுக இரு மெகா கட்சிகளும் களம் இறங்குகின்றன. இவர்களுக்கு நடுவில் தைரியமாக நின்று போட்டியில் குதித்துள்ளது நாம் தமிழர் கட்சி!

    Deepalakshmis nomination accepted in Vellore Constitution

    டிடிவி தினகரன், கமல் போன்ற ஜாம்பவான்களே போட்டியிடாத நிலையில், தற்போது மும்முனை போட்டி என்ற நிலை வேலூரில் உருவாகி உள்ளது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முடிவடைந்த நிலையில், வேட்புமனு பரீசிலனை இன்று தேர்தல் அதிகாரி முன்னிலையில் நடந்தது. அப்போது, அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணையாமல், இரட்டை இலை சின்னத்தில் எப்படி போட்டியிட முடியும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதை அடுத்து, ஏசி சண்முகத்தின் வேட்பு மனு நிறுத்தப்பட்டது.

    இதேபோல பணப்பட்டுவாடா புகாரில் கதிர் ஆனந்த் வேட்பு மனுவும் நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பரபரப்புக்கு பிறகு இவர்களின் மனுக்கள் மீண்டும் ஏற்கப்பட்டன. ஆனால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமியின் வேட்பு மனு உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.

    இதே தீபலட்சுமிதான், வேலூரில் தேர்தல் நின்றபோது, "சம்பந்தப்பட்டவர்களை தகுதி நீக்கம் செய்யாமல், ஒட்டுமொத்தமாக தேர்தலை நிறுத்தியது என்ன நியாயம், பணப்பட்டுவாடாவில் தொடர்புடைய அதிமுக, திமுக வேட்பாளர்களை திரும்பவும் வேட்பாளராக நிறுத்தகூடாது" என்று வாதிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Vellore Constitution Naam Tamilar Party Candidate Deepalakshmis nomination has accepted
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X