சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தீபாவளியை கொண்டாட 4 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை.. உற்சாகத்தில் மாணவர்கள்

தீபாவளி பண்டிகையையொட்டி, ஆன் லைன் வகுப்புகள் இன்று முதல் 4 நாட்களுக்கு நடைபெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளி பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. நவம்பர் 16ம் தேதி முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Deepavali Holidays for online classes for 4 days says education department - Students in excitement

இதற்காக நடத்தப்பட்ட பெற்றோர் கருத்து கேட்பு கூட்டத்திலும், பெரும்பாலானோர் பள்ளிகளை திறக்க வேண்டாம் என கூறியதாகவே தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பள்ளிகள் திறப்பை ஒத்திவைப்பதாக தமிழக அரசு அறிவித்தது. ஆன்லைன் வகுப்புகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் தெரிவித்தது.

ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி மாணவர்களுக்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நான்கு நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படாது என்றும் தெரிவித்துள்ளது.

Recommended Video

    DIWALI TROLL | LOCKDOWN DIWALI 2020 | ONEINDIA TAMIL

    பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டதால் உற்சாகத்தில் இருந்த மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இப்போது முதலே பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்து விட்டனர்.

    English summary
    The Tamil Nadu School Education Department has announced a four-day holiday for online classes ahead of the Deepavali celebrations on Saturday. Classes will not be held during the holidays.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X