சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு.. 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தமிழக அரசு அதிரடி!

தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Diwali : Official timing for use crackers |பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    சென்னை: தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தீபாவளி அன்று பட்டாசு வெடித்து கொண்டாடுவது மக்களின் வழக்கம். சிலர் அதிகாலையில் இருந்து இரவு வரை நாள் முழுக்க பட்டாசு வெடிப்பார்கள். இந்த நிலையில் பட்டாசு வெடிப்பதற்கு எதிராக இயற்கை ஆர்வலர்கள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இன்னொரு பக்கம் தீபாவளி பண்டிகை கொண்டாடும் மக்கள் தொடர்ந்து பட்டாசு வெடிப்பதற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். இந்தியா முழுக்க வரும் அக்டோபர் 26 மற்றும் 27ம் தேதிகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    ஜொய்ங்க்ன்னு ஒரு மெஷின்.. ஜய்ங்க்னு குப்பை அள்ளும்... இது செம.. திருச்சி மாநகராட்சி பலே!ஜொய்ங்க்ன்னு ஒரு மெஷின்.. ஜய்ங்க்னு குப்பை அள்ளும்... இது செம.. திருச்சி மாநகராட்சி பலே!

    கடந்த வருட வழக்கு

    கடந்த வருட வழக்கு

    பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் கடந்த வருடம் வழக்கு தொடுக்கப்பட்டது. பட்டாசை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்து இருந்தனர்.

    அனுமதி அளித்தது

    அனுமதி அளித்தது

    இதில் கடந்த வருடம் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், தீபாவளி நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதித்தது. தீபாவளி தினத்தன்று காலை 1 மணி நேரம், இரவு 1 மணி நேரம் என்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். பகல் நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை என்று தீர்ப்பு வழங்கியது.

    தொடர்கிறது

    தொடர்கிறது

    இந்த தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு கடந்த வருடம் மேல்முறையீடு செய்து அது உடனடியாக தள்ளுபடி செய்யப்பட்டது. ஆகவே சென்ற வருடம் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல் இந்த வருடமும் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்ற வருடம் போல இந்த வருடமும் தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

    எப்போது வெடிக்கலாம்

    எப்போது வெடிக்கலாம்

    காலை 6-7 மற்றும் இரவு 7-8 ஆகிய நேரங்களில் பட்டாசு வெடிக்கலாம். பள்ளி, மருத்துவமனை, நீதிமன்றம், குடிசை பகுதிகள், வழிபாட்டு தலங்கள் அருகே பட்டாசு வெடிக்க அனுமதி கிடையாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது தொடர்பாக கொண்டு வரப்பட்டு இருக்கும் இந்த விதிகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Deepavali: Restrictions imposed, People can blast crackers only for 2 hours in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X