சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தீபாவளிக்கு ஷாப்பிங் செய்ய 7 நாட்களுக்கு சென்னையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் மக்கள் ஷாப்பிங் செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் பொருட்கள் வாங்க செல்லும் மக்களின் வசதிக்காக சென்னையில் கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. பொதுமக்கள் வணிக வளாகங்களுக்கு சென்று வர ஏதுவாக வார இறுதி நாட்களில் 50 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 14ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. கொரோனா காலமாக இருந்தாலும் பண்டிகைக்கு துணிகள், பொருட்கள் வாங்க மக்கள் கடைவீதிக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் 7 நாட்களுக்கு 25 வழித்தடங்களில் 50 கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

Deepavali shopping special to run in Chennai 7 days

வரும் 24,25,26ம் தேதி வரையும், 31 மற்றும் நவம்பர் 1ம் தேதி, நவம்பர் 7 மற்றும் 8ஆம் தேதி 7 நாட்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது.

சென்னையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கொல்லத்துக்கு தினசரி சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே சென்னையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கொல்லத்துக்கு தினசரி சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே

தியாகராய நகர், புரசைவாக்கம், வள்ளலார் நகர் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றுவர ஏதுவாக பேருந்துகள் இயக்கப்படும். சிறப்புப் பேருந்தை எளிதில் அறிய அவற்றின் முகப்பில் Deepavali shopping special ஸ்டிக்கர் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
With the Deepavali festival just a few weeks away, additional city buses will be operated in Chennai for the convenience of commuters. It has been announced that 50 additional special buses will be operated on weekends to enable the public to visit shopping malls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X