சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமைச்சர் வேலுமணி குறித்து அவதூறு.. கைதால் ஆர்ப்பாட்டம்.. 43 பேருக்கு முன் ஜாமின்.. ஹைகோர்ட்

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: அமைச்சர் வேலுமணி தொடர்பாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்ட திமுக பிரமுகரின் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவை சேர்ந்த 43 பேருக்கு முன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமைச்சர் வேலுமணியை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாக பதிவிட்டதாக திமுக மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மற்றும் ஒன்றிய செயலாளர் துரை ஆகியோரை போலீசார் கைது செய்தனர்

defamation of Minister Velumani: anticipatory bail to 43 persons who protest against dmk person arrest

இந்த கைதை கண்டித்து கோவை திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மற்றும் கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்தது .

தூத்துக்குடி ஆட்சியர் கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல் நிலையம்-ஹைகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவுதூத்துக்குடி ஆட்சியர் கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல் நிலையம்-ஹைகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு

இதில் சீனிவாசன் , சண்முகப்பிரியா, தேவேந்திரன் ,உள்ளிட்ட 43 பேர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் என் .ஆர் இளங்கோ ஆஜராகி வாதிட்டார்

ஜாமீன் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், கோவை திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை உள்ளிட்ட திமுக நிர்வாகிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட 43 பேருக்கு முன்ஜாமின் வழங்கி தீர்ப்பளித்தார்

English summary
madras highcourt anticipatory bail to 43 persons who protest against dmk person arrest over defamation of Minister Velumani
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X