சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.. தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்

Google Oneindia Tamil News

Recommended Video

    புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.. தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    சென்னை: வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாகவும், தென் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பில், "வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

    Delhi air pollution is not coming to Chennai: chennai meteorological department

    காற்றழுத்தப் பகுதி காரணமாக நவம்பர் 4, 5 தேதிகளில் அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

    நவம்பர் 6 மற்றும் நவம்பர் 7ம் தேதிகளில் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு மீன்வர்கள் செல்ல வேண்டாம்.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்த பட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் காணப்படும்.

    தமிழகத்தில் கனமழையை பொறுத்தவரை அடுத்த 8ம் தேதியில் இருந்து தான் தொடங்கும். அதுவரை மிதமான மழைக்கே வாய்ப்பு உள்ளது. டெல்லி காற்று மாசு சென்னைக்கு வராது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    chennai meteorological department said Delhi air pollution is not coming to Chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X