சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"நல்லவர்" வென்றார்.. "நம்மவர்" பாராட்டினார்.. கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் சூப்பர் வாழ்த்து!!

கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi Assembly elections results | Manish Sisodia wins in Patparganj

    சென்னை: கமல்ஹாசன் அரவிந்த் கெஜ்ரிவாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தி விட்டார். மிகச் சிறப்பான வெற்றி பெற்றமைக்காக கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    வடதும் இல்லாமல், இடதும் இல்லாமல் மய்ய அரசியலை முன்னெடுத்து வருகிறார் கமல்ஹாசன்.. ஆரம்பத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து தன்னிடம் இருக்கும் திட்டத்தை பகிர்ந்து அதற்கான ஆலோசனையையும் பெற்றுவந்தார். இப்போதும் அவரை நேரடியாக சந்தித்து பல அரசியல் திட்டங்களுக்கு வலு சேர்த்து வருகிறார்.

    டெல்லி தேர்தலில் போட்டியிட்ட கெஜ்ரிவாலுக்கு தனது ஆதரவை வீடியோ மூலமாக பதிவிட்டவர் கமல்ஹாசன்.. "கெஜ்ரிவாலை தலைவராக பின் தொடராதீர்கள். அவரை அப்படியே உள்வாங்கி கொள்ளுங்கள். எனது தோளோடு தோள் நிற்கும் சகோதரர் கெஜ்ரிவாலுக்கு என்னுடைய வணக்கங்கள்" என்றார்.

    இனிதான் பிகே ரொம்ப பிஸி.. அடுத்தடுத்து மூவ்.. மோடிக்கு சிம்ம சொப்பனமாக மாறும் பிரசாந்த் கிஷோர்!இனிதான் பிகே ரொம்ப பிஸி.. அடுத்தடுத்து மூவ்.. மோடிக்கு சிம்ம சொப்பனமாக மாறும் பிரசாந்த் கிஷோர்!

    நல்ல நோக்கம்

    நல்ல நோக்கம்

    இதற்கு கெஜ்ரிவால் "நன்றி கமல் அவர்களே, டெல்லி முதல்வராக இருந்த ஐந்தாண்டு அனுபவத்தில் உணர்ந்தது என்னவென்றால் நமது நாட்டு மக்களை, வேண்டும் என்றே கல்வி அறிவில்லாதவர்களாகவும், வறுமையானவர்களாகவும் கடந்த 70 ஆண்டுகளாக வைத்துள்ளனர்... அரசிடம் பணம் இல்லை என்பது பொய்யான கருத்து ஆகும்.. ஆட்சியாளர்களுக்கு நல்ல நோக்கம் வேண்டும்" என்று ட்வீட்டரில் பதிலளித்து இருந்தார்.

    மக்கள் நீதி மய்யம்

    மக்கள் நீதி மய்யம்

    இந்நிலையில், இன்று, ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டுள்ளார். பாஜக ஒரு பக்கமும், காங்கிரஸ் இன்னொரு பக்கமும் சோகமாக உட்கார்ந்து கொண்டுள்ள நிலையில் இருவரையும் வீழ்த்திய சந்தோஷத்தி்ல் ஆம் ஆத்மி கட்சியினர் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இணக்கமான நட்பு

    இணக்கமான நட்பு

    கெஜ்ரிவாலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கமல்ஹாசன் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். கெஜ்ரிவால், கமல்ஹாசன் நட்பு நாடு அறிந்தது. கமல்ஹாசன் தனது கட்சியை மதுரையில் ஆரம்பித்தபோது அதன் தொடக்க விழாவுக்கு வந்திருந்த முக்கியஸ்தர்களில் கெஜ்ரிவாலும் ஒருவர். மேலும் டெல்லி சென்று கெஜ்ரிவாலுடனும் முன்பு பேசியிருந்தார் கமல்ஹாசன். இருவரும் இணக்கமான நட்பு பாராட்டி வருவர்கள். தமிழகத்தில் கெஜ்ரிவாலைப் போல கமல்ஹாசன் புதிய வரலாறு படைப்பார் என்ற நம்பிக்கையில் பலரும் உள்ளனர்.

    ஆச்சரியம்

    ஆச்சரியம்

    அதேபோல முன்பு சென்னைக்கு கெஜ்ரிவால் வந்திருந்தபோது கமல்ஹாசன் வீட்டுக்குப் போயிருந்தார். இதுகுறித்து கமல்ஹாசன் மகிழ்ச்சி வெளியிட்டிருந்தார். இருவரும் ஊழல், மதவாதத்தை எதிர்த்துப் போரிடுகிறோம்.தற்போது உள்ளசூழல் குறித்து இருவரும் உரையாடினோம். அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அது எங்களது கடமை என்று கூறியிருந்தார் கமல்.

    தமிழகத்தின் கெஜ்ரிவால்

    தமிழகத்தின் கெஜ்ரிவால்

    ஊழல் எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு மக்களின் மனதைக் கவர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் மீது நிறைய மரியாதை வைத்துள்ளார் கமல். ஊழல் எதிர்ப்பு விவகாரத்தில் கமலின் முன்னோடி இவர்தான். கிட்டத்தட்ட இன்னொரு கெஜ்ரிவாலாக தமிழகத்தில் உருவெடுக்கும் திட்டம்தான் கமல்ஹாசன் மனதில் உண்மையில் உள்ளது என்று கூட சொல்லலாம்.

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    தமிழக தலைவர்கள் பலரும் கூட கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன. திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வரிசையில் கமல்ஹாசனும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் இன்னும் வாழ்த்தவில்லை.. கமலின் நெருக்கத்தில் உள்ளவர் கெஜ்ரிவால் என்பது தெரியும்.. அப்படி இருந்தும் வாழ்த்து இன்னும் வரவில்லை.. கமல்ஹாசன் & ரஜினி ஒன்றுசேர்ந்து அரசியல் பிரவேசம் என்றுகூட ஒரு பேச்சு வந்தது.. அந்த வகையில் பார்த்தாலும் ஒரு வாழ்த்தும் இதுவரை வரவில்லை.. இனி வாழ்த்துவாரா என்றும் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம்!

    English summary
    Delhi Assembly Election Result: kamalhasan wishes kejriwal
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X