• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஜஸ்ட் 2 போட்டோ.. சிஎஸ்கே கூட.. பார்த்ததும் நெஞ்சுக்குள் "ஏதோ பண்ணுதே.." ரிஷப் பந்த் வேற லெவல்!

Google Oneindia Tamil News

சென்னை: காலம் தான் எவ்வளவு வேகமாக மாறுகிறது.. அது சிலரை எந்த அளவுக்கு உச்சத்துக்குக் கொண்டு சென்று வைக்கிறது, என்பதற்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் வளர்ச்சி ஒரு சூப்பர் உதாரணம்.

சென்னை அணி வீரர்களுக்கு நடுவே போய் நின்று, ஒரு போட்டோவிலாவது சேர்ந்து வந்துவிட மாட்டோமா என்று தவித்த அந்த ரிஷப் பந்த் தற்போது அதே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தனது தலைமையிலான டெல்லி அணியால் தோற்கடித்துள்ளார்.

இப்போதும் சிஎஸ்கே வீரர்களுக்கு நடுவே பந்த் இருக்கும் காட்சி புகைப்படமாக வெளியாகியுள்ளது. ஆனால் இப்போது கூட்டத்தோடு ஒருவராக இல்லை , அந்தக் கூட்டத்திற்கு முன்பாக தலைமை தாங்கி நடந்து செல்லும் கம்பீரமான போட்டோ அது.

ரிஷப் பந்த் அபாரம்

ரிஷப் பந்த் அபாரம்

இத்தனைக்கும் இந்த பெரிய வித்தியாசம் நடைபெற அதிக நாட்கள் தேவைப்படவில்லை. மூன்று வருடங்களுக்கு உள்ளாக முற்றிலுமாக வேறு ஒரு நபராக விஸ்வரூபமெடுத்து நிற்கிறார் ரிஷப் பண்ட். இந்திய கிரிக்கெட் அணியின் ஆடம் கில்கிறிஸ்ட் என்று புகழப்படும் இடதுகை அதிரடி ஆட்டக்காரர் இவர். தற்போது டெல்லி கேப்பிடல் அணி கேப்டனாகவும் பொறுப்பேற்றுள்ளார்.

நெகிழ்ந்த ரிஷப் பந்த்

நெகிழ்ந்த ரிஷப் பந்த்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது நடப்பு ஐபிஎல் தொடரில், முதல் போட்டியில் டெல்லி அணியை கடந்த சனிக்கிழமை எதிர்கொண்டது. தோனியுடன் நடந்துசென்று டாஸ் போடும் நிகழ்ச்சியில் பங்கேற்றது தனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது என்று ரிஷப் பந்த் கூறிய இதே போட்டியில்தான், தனது குருநாதர் தோனி தலைமையிலான சென்னை அணியை வீழ்த்தியது ரிஷப் பந்த் படை.

புகைப்படங்கள் வைரல்

புகைப்படங்கள் வைரல்

இந்த நிலையில்தான் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. 2018ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது , சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட அணி வீரர்கள் குரூப் செல்பி படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, டெல்லி அணிக்காக விளையாடி வந்தார். இருப்பினும் சிஎஸ்கே சாம்பியன் அணி வீரர்களுடன் ஒரு புகைப்படத்தில் நிற்க வேண்டும் என்ற ஆசையில் கூட்டத்தோடு கூட்டமாக கடைசி வரிசையில் நின்றபடி, அந்த புகைப்படத்தில் காட்சியளிக்கிறார் ரிஷப் பந்த்.

சிஎஸ்கே வீரர்களுக்கு முன்பாக

சிஎஸ்கே வீரர்களுக்கு முன்பாக

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி எளிதாக வெற்றி பெற்றது. மைதானத்தை விட்டு ரிஷப் பந்த் நடந்து சென்றபோது சிஎஸ்கே அணி வீரர்கள் அவருக்கு பின்னால் நடந்து செல்கின்றனர். ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த் பேட்டை வாங்கி அவரது தலைக்கு மேல் தூக்கி நிற்கிறார். இதுபோன்ற ஒரு புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது.

இரு போட்டோ

இரு போட்டோ

இப்போது, 2018, மற்றும் இப்போதைய புகைப்படம் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து சிலாகிக்கிறார்கள் ரசிகர்கள் . கூட்டத்தோடு கூட்டமாக பின்னால் நின்ற ரிஷப் பந்த் பின்னால் இப்போது சிஎஸ்கே கூட்டமாக நடந்து செல்கிறது. இதுதான் வளர்ச்சி என்று அவர்கள் சொல்கிறார்கள் . உண்மைதான், எந்த ஒரு நேரத்தில் களத்துக்கு வந்தாலும் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடக் கூடியவர் ரிஷப் பந்த் மாறிவிட்டார்.

அதிரடி வீரர் ரிஷப் பந்த்

அதிரடி வீரர் ரிஷப் பந்த்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் சிறப்பான பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு இந்திய அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார் அவர். பயப்படாமல் பந்துகளை சந்திக்க கூடியவர் என்று பெயர் பெற்றவர். துணிச்சலும், திறமையும் இருந்தால் எந்த இடத்துக்கும் முன்னேறலாம் என்பதற்கு இந்த இரு புகைப்படங்களும் வரலாற்றுச் சான்றாக மாற்றி நிற்கின்றன.

English summary
Delhi capitals team captain Rishabh pant's pictures with Chennai team going viral in social media. In 2018 Rishabh pant was part of Chennai Super kings team's group photo, now he is leading Delhi team to win against CSK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X