சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு 1000 பேர் வருகை.. நாளை கொரோனா பரிசோதனை

Google Oneindia Tamil News

சென்னை: டெல்லியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் மூலம் சுமார் 1,000 பேர் இன்று வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் முகாம்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு அழைத்து செல்லப்பபட்டனர். நாளை அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கடந்த சில வாரங்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்தது. ஆனால் அதேநேரம் கடந்த இரு நாட்களாக படிப்படியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை கணிசமாக குறைந்து வருகிறது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டஙகளை தவிர பெரும்பலான மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் தான் இருந்தது.

Delhi- Chennai Rajdhani spl arrived at Chennai 20:10

இந்நிலையில் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு ரயில்கள் மூலம் ஏராளமானோர் வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அத்துடன் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்கவைப்பதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் சுமார் 1,000 பேர் இன்று வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் முகாம்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு அழைத்து செல்லப்பபட்டனர். நாளை அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. எனவே அங்கிருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த ஆயிரம் பேரில் எத்தனை பேருக்கு கொரோனா உள்ளது என்பது இன்று தெரிந்து விடும்.

தலைமைச் செயலாளர் சண்முகத்தின் 'மறுப்பு' அறிக்கை... திமுக எம்பி டி ஆர் பாலு மீண்டும் பதில்தலைமைச் செயலாளர் சண்முகத்தின் 'மறுப்பு' அறிக்கை... திமுக எம்பி டி ஆர் பாலு மீண்டும் பதில்

ஏற்கனவே மாகாராஷ்டிராவில் இருந்து வந்த தமிழர்களில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கத்தாரில் இருந்து வந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

English summary
Delhi- Chennai Rajdhani spl arrived at Chennai at 20:10. It left from.delhi on 13th at 16:00 hrs . tomorrow covid 19 test for all delhi passengers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X