சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"நிலைமை" கை மீறி போகிறது.. உடைத்து கொண்டு திமிறும் விவசாயிகள்.. என்ன செய்ய போகிறது பாஜக..?

டெல்லியில் நிலைமை கைமீறி சென்று கொண்டிருக்கிறது

Google Oneindia Tamil News

சென்னை: டெல்லிக்குள்ளேயே வந்து முற்றுகையிட்டு விட்டனர் விவசாயிகள்... இதை எதிர்பாராத சம்பவம் என்று கூறி விட முடியாது. காரணம் லட்சக்கணக்கில் கூடிய விவசாயிகள் தலைநகருக்குள் வராமல் போக வாய்ப்பே இல்லை என்பதால்..!

Recommended Video

    உச்சத்தில் Delhi Farmers Protest..நிலைமை கை மீறி போகிறது..

    இப்போது மத்திய பாஜக அரசுக்கு மிகப் பெரிய அழுத்தத்தையும், நெருக்கடியையும் விவசாயிகள் ஏற்படுத்தியுள்ளனர். விவசாய சட்டங்களை வாபஸ் பெறுக என்பது மட்டுமே விவசாயிகளின் ஒரே கோரிக்கையாகும்.

    பல கட்டமாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் கூட விவசாயிகள் இதே கருத்தைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால் அரசுத் தரப்பு என்ன செய்தும் கூட உடன்பாடு எட்டப்படவில்லை.

    இதென்ன புதுஸ்ஸா இருக்கே.. அச்சு அசல்.. அப்படியே இதென்ன புதுஸ்ஸா இருக்கே.. அச்சு அசல்.. அப்படியே "அவங்களை" மாதிரியே.. கிளம்பியது சர்ச்சை!

    பேரணி

    பேரணி

    இந்த நிலையில்தான் டிராக்டர் பேரணியை விவசாயிகள் அறிவித்தனர். இதற்கு மத்திய அரசு தடை செய்ய முடியாது, டெல்லி போலீஸ்தான் கையாள வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் சொல்லி விட்டது... அத்துடன், இந்த முறை விவசாயிகள் பிரச்சினையில் அரசிடம் சற்று கடுமை காட்டியது சுப்ரீம் கோர்ட்... அரசின் கையாளுகை சரியில்லை என்றும் அது சாடியிருந்தது.

     புது அவதாரம்

    புது அவதாரம்

    இந்த நிலையில்தான் இன்று டிராக்டர் பேரணி தொடங்கியது. ஆனால் இன்று விவசாயிகள் புது அவதாரம் பூண்டு விட்டனர். யாரும் எதிர்பாராத வகையில், திட்டமிடப்பட்ட பாதையில் போகாமல் வேறு பாதையில் புகுந்து தலைநகருக்குள் புகுந்து விட்டனர்.. மத்திய டெல்லி, செங்கோட்டை உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் விவசாயிகள் திமுதிமுவென புகுந்து நிரப்பி விட்டனர். இதை யாருமே கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.

     முற்றுகை

    முற்றுகை

    கண் மூடித் திறக்கும் நேரத்திற்குள் டெல்லியை முற்றுகையிட்டு விட்டனர் விவசாயப் பெருமக்கள். இதை போலீஸார் சற்றும் எதிர்பார்க்கவில்லை... இப்படி நடக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.. தடியடி நடத்தினர், கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். எதுக்குமே அஞ்சவில்லை விவசாயிகள்... மாறாக புகுந்து புறப்பட்டு விட்டனர்.

    பரபரப்பு

    பரபரப்பு

    இப்போது மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்ற பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரணம், விவசாய சட்டங்களை திரும்பப் பெறாமல் நாங்கள் டெல்லியை விட்டு போக மாட்டோம் என்று விவசாயிகள் கூறி விட்டனர். இதனால் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கில் விவசாயிகள் புகுந்துள்ளதால் படை பலத்தை பயன்படுத்தி யாரையும் வெளியேற்ற முடியாது. அப்படி செய்தால் மிகப் பெரிய வன்முறை மூளும்.. கலவரமாக அது மாறி போய் விடும். பல உயிரிப்புகளும் ஏற்படும் அபாயம் உண்டு.

    பாஜக

    பாஜக

    அப்படி நடந்தால் சர்வதேச அளவில் விவசாய சமுதாயத்தை மத்திய அரசு பகைத்துக் கொண்டது போலாகி விடும். மேலும் விவசாயிகளை தாக்கிய அவப் பெயரும் பாஜகவுக்கு வந்து சேரும். எனவே விவசாய சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்று விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருமா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த விஷயத்தில், உடனடியாகவும், சாதுர்யமாகவும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டி உள்ளது.. அப்படி செய்தால் இது பாஜகவின் சாமர்த்தியமாக அமையும். இவர்களை கட்டுப்படுத்தாவிட்டால், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.. பாஜகவுக்கும் இனி சிக்கல்தான்..!

    English summary
    Delhi farmers tractor rally and violent protest
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X