• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

தமிழக காங். செயல் தலைவர்கள் கூண்டோடு மாற்றம்? பதவியை வாங்கித் தருவதாக புரோக்கர்கள் ஜரூர் பேரம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர்கள் கூண்டோடு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து செயல் தலைவர் பதவியை பெற்றுத் தருகிறோம் என சில சீனியர்களிடம் டெல்லி மேலிடத்துக்கு நெருக்கமான நபர்கள் ரகசிய வசூல் வேட்டை நடத்தி உள்ளதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சி மேலிடம் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதன் முதல் கட்டமாக தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோருடன் காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தியது.

டெல்லியில் பிரசாந்த் கிஷோருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் சில மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொள்வது குறித்து சீனியர்களிடம் ராகுல் காந்தி விவாதித்து வருகிறார்.

க்ரீன் சிக்னல்.. அறிவாலயத்தில் இருந்து சுதீஷுக்கு பறந்த முக்கிய தகவல்.. அதிமுகவும் ரெடியாகிறது..!க்ரீன் சிக்னல்.. அறிவாலயத்தில் இருந்து சுதீஷுக்கு பறந்த முக்கிய தகவல்.. அதிமுகவும் ரெடியாகிறது..!

கட்டமைப்பில் மாற்றம்

கட்டமைப்பில் மாற்றம்

மேலும் பிரசாந்த் கிஷோர் கொடுத்த வியூகப்படி, காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை அடியோடு தலைகீழாக மாற்றுவது தொடர்பாகவும் டெல்லி மேலிடம் விவாதித்து வருகிறது. தேசிய அளவில் துணைத் தலைவர்கள், செயல் தலைவர்கள் பதவிகள் உருவாக்கப்பட உள்ளன. மாநிலத் தலைவர்களை மாற்றிவிட்டு ஆக்டிவ் தலைவர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளனர். கட்சியின் கீழ் நிலையில் இருந்து மேல் மட்டம் வரையில் இந்த மாற்றத்தை கொண்டுவர உள்ளனராம்.

கே.எஸ். அழகிரி மாற்றம்

கே.எஸ். அழகிரி மாற்றம்

இதனையடுத்து தமிழக காங்கிரஸிலும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. அப்படி கே.எஸ். அழகிரி மாற்றப்பட்டால் செல்வப் பெருந்தகை, விஜயதாரணி, ஜோதிமணி, திருநாவுக்கரசர் என பலரும் தலைவர் பதவிக்கான ரேஸில் இருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க தமிழக காங்கிரஸ் கமிட்டியின் 2 செயல் தலைவர் பதவிகள்தான் இப்போது ஹாட்டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.

தமிழக செயல் தலைவர்கள்

தமிழக செயல் தலைவர்கள்

தமிழக காங்கிரஸ் கட்சியில் வசந்தகுமார், டாக்டர் ஜெயக்குமார், டாக்டர் விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம் என 5 பேர் செயல் தலைவராக 2019-ல் நியமிக்கப்பட்டனர். இதில், வசந்தகுமாருக்கு மதுரை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, புதிக்கோட்டை, வட சென்னை, தென் சென்னை மாவட்டங்கள்& சிறுபான்மைத் துறை, ஊடகத் துறை, மீன்வளர்ப்பு துறை ஆகியவை ஒதுக்கப்பட்டிருந்தன. அவர் மறைந்து விட்டதால் அந்த இடம் காலியாக இருக்கிறது.

செயல் தலைவர்கள் கூண்டோடு மாற்றம்

செயல் தலைவர்கள் கூண்டோடு மாற்றம்

மேலும், விஷ்ணுபிரசாத், ஜெயக்குமார் இருவரும் எம்.பி.க்களாக இருக்கிறார்கள். மயூரா ஜெயக்குமாருக்கு எம்.எல்.ஏ. சீட் ஒதுக்கப்பட்டும் அவர் தோற்றுப் போய்விட்டார். இத்தகையை காரணங்களை சுட்டிக்காட்டி, கட்சித் தலைவர் பதவியுடன் செயல் தலைவர்களையும் கூண்டோடு மாற்றப்படுகிறார்கள் என தகவல் சத்தியமூர்த்தி பவனில் பரவியது.

பதவிக்காக பேரங்கள்

பதவிக்காக பேரங்கள்

இந்த முறை செயல் தலைவர் பதவிகளில் புதிய முகங்கள், தேர்தலில் நிற்பதற்கு இதுவரை வாய்ப்பு கிடைக்காதவர்கள் அமர்த்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் செயல் தலைவர் பதவியில் இவரை நியமியுங்கள் என்ற கோரிக்கையோடு முன்னாள் தலைவர்கள் பலரும் ராகுலுக்கு தகவல் பாஸ் பண்ணியபடி இருக்கிறார்கள். இந்த சூழலில், செயல் தலைவர் பதவிக்கு உங்கள் பெயரை பரிந்துரைக்கிறோம்' என்று சொல்லி, முக்கியத் தலைகளிடம் வசூல் வேட்டையில் குதித்துள்ளது டெல்லி மேலிடத்துக்கு நெருக்கமான புரோக்கர்கள் கோஷ்டி. தங்களுக்கு பதவி கிடைக்காமல் போனால் செயல் தலைவர் பதவிக்காக மிக ரகசியமாக பேசப்படும் அத்தகைய பேரங்களை பூதாகரமாக்கிவிடுவது எனவும் பணம் கொடுத்தவர்கள் எச்சரித்தும் வருகின்றனராம். இன்னும் செயல், செயல் தலைவர் பதவி தொடர்பான பேர விவரங்களை டெல்லிக்கு ரகசிய ரிப்போர்ட்டாகவும் அனுப்பி விட்டனராம்.

English summary
Sources said that the Delhi High command may change the All TNCC Working Presidents.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X