சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியிலிருந்து புகை இப்படித்தான் வரும்.. சென்னை காற்று மாசு.. படம் போட்டு எச்சரிக்கும் வெதர்மேன்!

டெல்லியில் இருந்து தமிழ்நாட்டிற்கு எப்படி மாசுபட்ட புகை வரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் விளக்கி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லியிலிருந்து பரவும் காற்று மாசு.. என்ன காரணம்?- வெதர்மேன் விளக்கம்

    சென்னை: டெல்லியில் இருந்து தமிழ்நாட்டிற்கு எப்படி மாசுபட்ட புகை வரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் விளக்கி இருக்கிறார்.

    சென்னையில் காற்று மிக மோசமாக மாசு அடைந்து வருவதாகவும், காற்று தரக்குறியீடு சுவாசிக்க தகுதியற்ற அளவை எட்டியுள்ளதாக காற்று மாசுபாடு கண்காணிப்பு மையம் அறிவித்து இருக்கிறது. நேற்றுதான் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த எச்சரிக்கையை விடுத்தது.

    இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார். அதேபோல் தமிழ்நாட்டில் எப்போது மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    வள்ளுவரை வைத்து அரசியல் செய்யாதீர்கள்.. அவரை விடுங்கள்.. விஜயகாந்த் வேண்டுகோள்!வள்ளுவரை வைத்து அரசியல் செய்யாதீர்கள்.. அவரை விடுங்கள்.. விஜயகாந்த் வேண்டுகோள்!

    என்ன போஸ்ட்

    என்ன போஸ்ட்

    தமிழ்நாடு வெதர்மேன் தனது போஸ்ட்டில், நல்ல செய்தி, கிழக்கு திசை நோக்கி செல்லும் காற்று சென்னைக்கும் தமிழகத்தின் கடலோர பகுதிக்கும் மழையை கொண்டு வரும். இதனால் நவம்பர் 14 அல்லது அதற்கு அருகாமை உள்ள தேதிகளில் மழை பெய்யும்.

    மழைக்கு உதவும்

    மழைக்கு உதவும்

    மேடன் ஜூலியன் ஆசிலேஷன் வளிமண்டல அடுக்கில் நவம்பர் கடைசியில் ஏற்படும். இது மழைக்கு அதிகமாக உதவும். இதனால் நவம்பர் கடைசி வாரம் முதல் டிசம்பர் முதல் வாரம் வரை நல்ல மழை பெய்யும், என்று கூறியுள்ளார்.

    எப்படி புகை

    எப்படி புகை

    அவர் தனது இன்னொரு போஸ்ட்டில், டெல்லி மற்றும் வட இந்தியாவில் இருக்கும் புகை தமிழகத்திற்கு அழைத்து வரப்படும். நான் கொடுத்திருக்கும் புகைப்படங்கள்தான் அதற்கு ஆதாரம். காற்று எப்படி செல்லும் என்பதற்காக திசையை குறிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளேன்.

    காற்று நிலை

    காற்று நிலை

    காற்று டெல்லியில் இருந்து சென்னைக்கு இப்படித்தான் வரும். இனிமேல் புகை குறித்து அப்டேட் செய்ய மாட்டேன். என்னமோ பண்ணிட்டு போங்க என்று கோபமாக பதில் அளித்துள்ளார்.

    English summary
    Delhi or North India pollution can be dragged to Chennai says Tamilnadu Weatherman in his post.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X