சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

BREAKING NEWS LIVE: தமிழகத்தில் 3 நாட்களில் படிப்படியாக மழை குறையும்

Google Oneindia Tamil News

Recommended Video

    அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையில் மழை தொடரும் - வானிலை மையம்- வீடியோ

    சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகைளை பார்வையிட மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது.

    கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகிறார்கள். நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவடங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு தவிர பொது மக்களும் உதவி செய்து வருகிறார்கள்.

    உடனடி நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு ரூ. 1,000 கோடி ஒதுக்கியுள்ளது.

    rain

    Newest First Oldest First
    4:27 PM, 23 Nov

    புயல் பாதித்த மாவட்டங்களில் தார்ப்பாய் வழங்க அரசு உத்தரவு

    வீடுகளை இழந்த மக்களுக்கு தார்ப்பாய் வழங்கப்படும்

    மழை தொடர்ந்து பெய்து வருவதால் டெல்டா மக்கள் பெரும் அவதி

    நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தார்ப்பாய் வழங்கப்படும் - முதல்வர் அறிவிப்பு

    2:35 PM, 23 Nov

    மனிதாபிமானம் கருதி பிரதமர் இங்கு வந்து பார்வையிட வேண்டும்- கமல்ஹாசன்

    பிரதமர் பார்வையிட்டால்தான் அரசு சக்கரம் வேகமாக சுழலும் - கமல் பேச்சு

    1:09 PM, 23 Nov

    சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் புயல் நிவாரணமாக ரூ.1 கோடி நிதி

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் காசோலை வழங்கப்பட்டது

    12:09 PM, 23 Nov

    தமிழகத்தில் 3 நாட்களில் படிப்படியாக மழை குறையும்

    தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு

    ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

    திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்

    11:55 AM, 23 Nov

    வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி

    செங்கல்பட்டில் அதிகபட்சமாக 18 செ.மீ மழை

    8:08 AM, 23 Nov

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகள் இயங்கும்

    திருவாரூர் மாவட்டத்தில் 5 வட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

    புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

    நாகைப்பட்டனத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    கன்னியாகுமரியில் மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

    புழல், சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    மதுராந்தகம் ஏரியில் ஒரே நாளில் 13 அடி நீர் மட்டம் உயர்ந்தது

    தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது

    திருவள்ளூர், கடலூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காலையிலிருந்து மழை பெய்கிறது

    சென்னையில் வெயிலும், மேகமூட்டமுமாக இருக்கிறது

    7:41 AM, 23 Nov

    கஜா பாதிப்பு: 5 பேர் கொண்ட மத்திய குழு இன்று வருகை
    12:10 PM, 22 Nov

    வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி

    சென்னையில் இயல்பைவிட 45 சதவீதம் மழை குறைந்துள்ளது

    11:45 AM, 22 Nov

    கஜா புயல் தொடர்பாக மாவட்ட வாரியாக அறிக்கை தேவை-ஹைகோர்ட்

    தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    11:00 AM, 22 Nov

    சென்னை உட்பட தமிழகமெங்கும் பரவலாக மழை

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மழை நீடிப்பு

    10:54 AM, 22 Nov

    திமுக வேண்டுமென்றே அரசை குறை கூறுகிறது - முதல்வர்

    திமுக அரசைவிட அதிமுக அரசு அதிக நிவாரணம் வழங்கியுள்ளது - முதல்வர்

    நிஷா புயலின் போது திமுக குறைவான நிவாரணம் வழங்கியது - முதல்வர்

    10:40 AM, 22 Nov

    கஜாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 63 - முதல்வர்

    3,41,770 வீடுகள் புயலால் சேதம் அடைந்துள்ளது - முதல்வர்

    10:37 AM, 22 Nov

    முதற்கட்டமாக ரூ.500 கோடி கேட்கப்பட்டுள்ளது - முதல்வர்

    விரைவில் மத்திய குழு தமிழகம் வரும் என்று மோடி கூறினார் - முதல்வர்

    10:34 AM, 22 Nov

    கஜா சேதம் குறித்து பிரதமர் மோடியிடம் ஆலோசித்த பின் முதல்வர் பேட்டி

    கஜா நிவாரணத்திற்கு ரூ.15,000 கோடி கேட்கப்பட்டுள்ளது - முதல்வர்

    10:33 AM, 22 Nov

    தமிழக முதல்வர் பழனிச்சாமி டெல்லியில் பேட்டி
    10:18 AM, 22 Nov

    தஞ்சை ஒரத்தநாடு பகுதியில் தென்னை விவசாயி தற்கொலை

    சோழகன்குடிகாடு கிராமத்தில் விவசாயி சுந்தரராஜ் தற்கொலை

    கஜா புயலால் ஒரத்தநாடு தென்னை மரங்கள் முறிந்து சேதம்

    10:08 AM, 22 Nov

    பிரதமரை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

    கஜா புயல் நிவாரணத்திற்கு நிதி உதவி வழங்க கோரிக்கை

    7:48 AM, 22 Nov

    பிரதமர் மோடியை இன்று நேரில் சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் விவரிக்க உள்ளார்

    பிரதமர் மோடியிடம் கஜா புயல் நிவாரண நிதியை கோரவும் முதல்வர் முடிவு

    வருவாய், நிதித்துறை தயாரித்துள்ள அறிக்கையை பிரதமரிடம் அளிப்பார்

    உடனடி நிதியாக ரூ.13 ஆயிரம் கோடி கேட்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டம்

    7:15 AM, 22 Nov

    தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

    சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

    மழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும்

    கஜா-2, கஜா-3 என்று எதுவும் கிடையாது, எல்லாம் புரளி: வானிலை ஆய்வு மையம்

    5:59 PM, 21 Nov

    கன மழை எதிரொலி.. புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
    4:31 PM, 21 Nov

    நாகை வருவாய் கோட்டத்துக்குட்பட்ட கல்லூரிகளுக்கும் விடுமுறை
    4:31 PM, 21 Nov

    நாகப்பட்டனத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
    12:11 PM, 21 Nov

    சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும்
    12:07 PM, 21 Nov

    வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி
    11:10 AM, 21 Nov

    டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் பள்ளிகள் துவக்கம்

    புயல், மழை காரணமாக இதுவரை விடுமுறை விடப்பட்டிருந்தது

    9:35 AM, 21 Nov

    கஜா புயல் நிவாரண நிதி தொடர்பாக பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

    சென்னையிலிருந்து இன்று மாலை டெல்லி புறப்படுகிறார் முதல்வர்

    நாளை காலை பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்

    9:04 AM, 21 Nov

    சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்கிறது

    எழும்பூர், கிண்டி, வடபழனி, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம்

    தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை

    செங்கல்பட்டிலும் கனமழை பெய்கிறது

    கனமழையால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

    8:42 AM, 21 Nov

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

    குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது

    சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்

    மீனவர்களுக்கு தென் மேற்கு வங்கக்கடலில் மீன்பிடிக்க செல்ல தடை

    7:43 AM, 21 Nov

    புயல் பாதித்த மாவட்டங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் ஆய்வு

    இன்றும் நாளையும் 3 மாவட்டங்களில் ஆளுநர் நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்

    இன்று நாகையிலும், நாளை திருவாரூர், தஞ்சாவூரிலும் ஆளுநர் நேரில் ஆய்வு

    7:42 AM, 21 Nov

    இன்று மாலை டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    புயல் பாதிப்புக்கு மத்திய அரசிடம் நிதி கேட்க டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி

    நாளை காலை பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார் முதல்வர் பழனிசாமி

    பிரதமர் மோடியிடம் புயல் சேதம் பற்றிய இடைக்கால அறிக்கையை வழங்கவும் முதல்வர் முடிவு

    READ MORE

    English summary
    Gaja Storm hits delta districts heavily.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X