சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுந்தர வனக் காடுகள் அருகே கரையைக்கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - இந்திய வானிலை மையம்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்குவங்கம் மற்றும் வங்கதேச கடற்கரை அருகே இன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்குவங்கம் மற்றும் வங்கதேச கடற்கரை அருகே இன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

Depression: Heavy rainfall alert in Odisha, West Bengal

மேற்கு மத்திய வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்து வருகிறது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிலவரப்படி மேற்குவங்கம் - வங்கதேச கடற்பகுதிக்கு வட மேற்கே நிலை கொண்டுள்ளது. இதுமேலும் நகர்ந்து மேற்குவங்கம் மற்றும் வங்கதேச கடற்கரையையொட்டி சுந்தர வனக் காடுகள் அருகே இன்று கரையை கடக்கக்கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.

சென்னை.. இந்த வருடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கொட்டிய மழை.. 2 மணி நேரத்தில் 65 மி.மீ சென்னை.. இந்த வருடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கொட்டிய மழை.. 2 மணி நேரத்தில் 65 மி.மீ

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் எண்ணூர், காட்டுபள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் தூர எச்சரிக்கைக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

English summary
The depression over Bay of Bengal is expected to run parallel off the Odisha coast, before crossing West Bengal and Bangladesh coast.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X