சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நகராமல் ஒரே இடத்தில் நங்கூரம் போட்டு அமர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்... வெளுத்து வாங்கும் மழை

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் 30 மணி நேரம் ஒரே இடத்தில் நீடிக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக்கடலில் வலுவிழந்த புரேவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ராமநாதபுரத்தில் இருந்து தென் மேற்கே 40 கி.மீட்டர் தொலைவிலும், பாம்பனில் இருந்து தென்மேற்கே 70 கி.மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டு இருக்கிறது. 30 மணிநேரமாக ஒரே இடத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிப்பதால் இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

Recommended Video

    தமிழகம்: 7 மாவட்டங்களில் எதிர்பார்க்கலாம் கனமழை.. விடாது துரத்தும் புரெவி..!

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரேவி புயலாக உருவெடுத்தது. இலங்கைக்கு கிழக்கே மையம் கொண்டிருந்த புரேவி புயல் இரு தினங்களுக்கு முன்பு இலங்கையில் திரிகோணமலை பகுதியை தாக்கி கரையை கடந்தது. அதன் பிறகு புரேவி புயல் மன்னார்வளைகுடா கடல் பகுதிக்கு நகர்ந்தது.

    Depression lasting 30 hours. Heavy rain for 2 days in TamilNadu

    தமிழகத்தில் பாம்பன் கன்னியாகுமரி இடையே புரேவி புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டது.

    மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நிலவி வருகிறது. 5ஆம் தேதி மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து ராமநாதபுரம் வழியாக மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு கேரள பகுதியை நோக்கி நகரும் என்று கூறப்பட்ட நிலையில் கடந்த 30 மணி நேரமாக அதே இடத்தில் நங்கூரம் போட்டு அமர்ந்திருக்கிறது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர், நாகப் பட்டினம், ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள்ளது. மன்னார்குடி, புதுக்கோட்டை ,மயிலாடுதுறை ,விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    குடவாசல், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நாகை வேதாரண்யம், தலைஞாயிறு, கோடியக்கரை, ஆயக்காரன்புலம், மயிலாடுதுறை, குத்தாலம், மங்கைநல்லூர், மணல்மேடு, செம்பனார்கோவில், சீர்காழி பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ராமநாதபுரத்தில் இருந்து தென் மேற்கே 40 கி.மீட்டர் தொலைவிலும், பாம்பனில் இருந்து தென்மேற்கே 70 கி.மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து வடகிழக்கு பகுதியில் 160 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருக்கிறது.

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ராமநாதபுரம்- தூத்துக்குடி இடையே இன்று மதியம் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்தது. ஆனால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து நகராமல் பல மணி நேரமாக அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.

    30 மணி நேரத்திற்கும் மேலாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் நங்கூரம் போட்டு அமர்ந்துள்ளதால் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து பலத்த மழை பெய்யும். குறிப்பாக டெல்டா மண்டலங்களில் மிக கனத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

    English summary
    The deep depression is located 40 km southwest of Ramanathapuram, 70 km southwest of Pamban and 160 km northeast of Kanyakumari. The distance is with the level. The Indian Meteorological Department has forecast heavy rains for two more days in one place for 30 hours.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X