சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நெருங்கும் காற்றழுத்தம்.. நாகை, கடலூர் துறைமுகங்களில் ஏற்றப்பட்டது 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

Google Oneindia Tamil News

Recommended Video

    நாகை துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது- வீடியோ

    சென்னை: நாகை மற்றும் கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னைக்கு 1150 கிலோ மீட்டர் தொலைவிலும், மச்சிலிப்பட்டினத்திற்கு 1350 கிலோ மீட்டர் தொலைவிலும் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Depression) காரணமாக கடலூர் துறைமுகத்தில் புயல் தூர முன்னறிவிப்பு (Distant Cautionary) கொடி எண்- 1 இன்று பிற்பகல் 2 மணிக்கு ஏற்றப்பட்டுள்ளது.

    Depression over southeast Bay of Bengal: Number 1 signal hoist in Cuddalore harbour

    மேலும் ஆழ் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்புமாறும் ஏற்கனவே அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி உள்ளனர். வரும் 15ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    பேய்ட்டி புயலாக இது உருமாறி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 100-120 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.

    English summary
    Number 1 signal hoist in Cuddalore harbour as depression over southeast Bay of Bengal
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X