சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிவர் புயல் உருவானது.. வானிலை மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. மிகமிக கனமழை எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. நேற்று மாலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் நிவர் புயல் உருவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மாலை கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    நிவர் புயல் உருவாகி விட்டது! அடுத்து என்ன?

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மேலும் வலுவடைந்து வருகிறது.

    நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் நேற்று பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. சென்னையிலும் நேற்று பரவலாக நல்ல மழை பெய்தது.

    டெல்டா மாவட்டங்கள்

    டெல்டா மாவட்டங்கள்

    இந்நிலையில் இன்று தஞ்சை, கடலூர், திருவாரூர் நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நேற்று மாலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்நிலலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. நேற்று மாலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் நிவர் புயல் உருவாகி உள்ளது. இன்று மாலை தீவிர புயலாக மாறும்.

    120 கிமீ வேகத்தில் காற்று

    120 கிமீ வேகத்தில் காற்று

    இதனால் நாகப்பட்டினம் முதல் சென்னை வரை கடலோரப்பகுதிகளில் உச்சபட்சமான அளவில் மழை பெய்யும். நிவர் புயல் இன்று இரவில் இருந்தே வலுவடைய தொடங்கும். வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மகாபலிபுரம் இடையே நாளை மாலை கரையை கடக்க தொடங்கும். அப்போது மணிக்கு 100 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். மிக கனமழை பெய்யும். புயல் கரையை கடந்து 26ம் தேதி மும்பை பகுதியில் வழுவிழுந்துவிடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

    மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

    வங்கக்கடலில் தற்போது நிலை கொண்டுள்ள புயல் காரணமாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ராமேஸ்வரம், குளச்சல் ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    மக்கள் வெளியேற உத்தரவு

    மக்கள் வெளியேற உத்தரவு

    தமிழக கடலோர பகுதிகளுக்கு புயல் நெருங்கி வரும் போது கடலில் அதிக அளவில் சீற்றம் இருக்கும். கடல் அலைகள் 1 மீட்டர் முதல் 3 மீட்டர் உயரம் வரை எழும்பும். அதனால் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நிவர் புயல் குறித்த அவசர ஆலோசனை நடந்தது. புயல் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பேரிடர் படை தயாராக உள்ளது.

    English summary
    Depression turns into a storm today, Nivar storm will cross the Tamil Nadu coast tomorrow. heavy rain will fall cost districts of tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X