சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு.. ஆறுதல் அளிக்கும் சென்னை .. பயமுறுத்தும் கோவை, சேலம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், இன்று மேலும் 26,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 30,14,235 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளதோடு, கோவை சேலம் ஆகிய பகுதிகளில் பாதிப்பு உயர்ந்து வருகிறது.

தமிழக சுகாதாரத்துறை சார்பில் தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்கள், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தினமும் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் தமிழ் 5:கோபமா..எனக்கா..ராஜு மேலேயா.. இது மட்டும்தான் காரணம்.. பாவனியின் புது விளக்கம் பிக் பாஸ் தமிழ் 5:கோபமா..எனக்கா..ராஜு மேலேயா.. இது மட்டும்தான் காரணம்.. பாவனியின் புது விளக்கம்

அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,தமிழகத்தில் மேலும் 26,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 30,14,235 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இது நேற்றைய பாதிப்பை விடவும் கூடுதலாக உள்ளது.

 குணமடைந்தவர்கள் எண்ணிக்கை

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை

தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 17,456 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 28,06,501 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இன்று மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 37,073 ஆக உயர்ந்துள்ளது.

 35 பேர் உயிரிழப்பு

35 பேர் உயிரிழப்பு

கொரோனா காரணமாக தனியார் மருத்துவமனைகளில் 23 பேரும், அரசு மருத்துவமனைகளில் 12 பேரும் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 8007 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 61815 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட குறைவாகும். ஆனால் கோவை, சேலம், செங்கல்பட்டு, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றைய பாதிப்பை விட கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. கோவையில் இன்று மட்டும் 3082 பேருக்கும், சேலத்தில் 785 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 கொரோனா சோதனை

கொரோனா சோதனை

இதுவரை 5,99,80,920 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும்1,50,635 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,70,661 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை மொத்தம் 17,60,772 ஆண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைக்கு மட்டும் 15,477 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 கொரோனாவால் பெண்கள் பாதிப்பு

கொரோனாவால் பெண்கள் பாதிப்பு

பெண்களில் இதுவரை மொத்தம் 17,60,772 பேர் பெண்கள் எனவும், இன்றைக்கு மட்டும்12,53,425 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 38 திருநங்கைகளுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திருநங்கைகள் இன்று யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
As the number of coronaviruses continues to rise in Tamil Nadu, another 26,981 people have been diagnosed with coronavirus and the number has risen to 30,14,235, according to a statement issued by the state health department today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X