சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல்வர் பழனிச்சாமியின் 10 நாள் வெளிநாட்டு பயண விவரம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    EPS America Tour | எடப்பாடி அமெரிக்கா பயணம் :ஆதரவாளர்களை யோசனை- வீடியோ

    சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு 10 நாள்கள் அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    முதல்வரின் வெளிநாட்டுப் பயண விவரம் தொடர்பான அறிவிப்பினை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணம் வரும் 28ம் தேதி முதல் 10 நாள்கள் அமெரிக்கா உள்பட மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

    வானத்தையும் விடலையா நீங்க.. விண்வெளியில் இருந்தபடி புருஷன் வங்கி கணக்கை நோட்டம் விட்ட பெண்! வானத்தையும் விடலையா நீங்க.. விண்வெளியில் இருந்தபடி புருஷன் வங்கி கணக்கை நோட்டம் விட்ட பெண்!

    மருத்துவ பணிகள் ஒப்பந்தம்

    மருத்துவ பணிகள் ஒப்பந்தம்

    வரும் 28ம் தேதி முதல்வர் பழனிச்சாமி சென்னையில் இருந்து புறப்பட்டு இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டன் செல்கிறார். அங்கு மருத்துவர்கள் மருத்துவ மேம்பாடு குறித்த பணிகளை கண்டறிந்து அதனை தமிழகத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். முதல்வருடன் அமைச்சர் விஜய பாஸ்கர், ஆர்பி உதயக்குமார், ஆகியோர் செல்கிறார்கள்

    தொழில் முனைவோர் சந்திப்பு

    தொழில் முனைவோர் சந்திப்பு

    இங்கிலாந்தில் இருந்து செப்டம்பர் 1ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்லும் முதல்வர் பழனிச்சாமி அங்குள்ள நியூயார்க் நகருக்கு செப்டம்பர் 2ம் தேதி சென்றடைகிறார். அங்கு அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் மற்றும் அமெரிக்க தொழில் முனைவோர் பிரதிநிதிகளை சந்திக்கும் நிகழ்ச்சிகளில பங்கேற்கிறார். அத்துடன் அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து முதல்வர் கலந்துரையாடும் நிகழ்ச்சியும் இந்த பயணத்தில் இடம் பெற்றுள்ளது

    10ம் தேதி தமிழகம்

    10ம் தேதி தமிழகம்

    அமெரிக்காவிலிருந்து செப்டம்பர் 7ம் தேதி புறப்படும் முதல்வர் துபாய் சென்று அங்கு செப்டம்பர் 8 மற்றும் 9ம் தேதிகளில் தொழில் முனைவோரை சந்திக்கும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் வரும் 10ம் தேதி தமிழகம் திரும்புகிறார்.

    சுற்றுப்பயண நோக்கம்

    சுற்றுப்பயண நோக்கம்

    இந்த வெளிநாட்டு பயணத்தில் பல்வேறு முக்கிய நபர்களையும், தொழில் முதலீட்டாளர்கள் உள்ளிட்டோரையும் முதல்வர் சந்திக்க உள்ளார். குறிப்பாக தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதலீட்டை ஈர்ப்பதே முதல்வரின் வெளிநாட்டு பயணத்தின் நோக்கம் என ஏற்கனவே தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    English summary
    Details of Chief Minister edappadi Palanisamy's 10-day foreign trip. Tamil Nadu Chief Minister will travel to 3 countries like America, England and Dubai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X