சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்சஸ் 2021 .. வீடுகள் கணக்கெடுப்பு தொடர்பாக என்னென்ன கேள்விகள்.. தமிழக அரசிதழில் வெளியீடு

Google Oneindia Tamil News

சென்னை: 2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது

முதற்கட்டமாக வீடுகளை கணக்கிடும் பணிக்கான விவரங்கள் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Details of the Census for 2021 are published in the Gazette

என்ஆர்சிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில் வீடுகளை கண்க்கிடும் பணி குறித்த தகவல்கள் மட்டும் இடம் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில், வீட்டு எண்,வீடுகளின் எண்ணிக்கை, வீட்டின் உரிமையாளர் யார், எத்தனை வீடுகள் உள்ளது. வீட்டின் நிலை என்ன, வீடுகளில் மொத்தம் வாழும் நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு, ஆண் பெண் எத்தனை பேர் உள்ளார்கள். வீட்டின் குடிநீர் ஆதாரம் எது? வீட்டின் உரிமையாளர் எந்த சாதி பிரிவைச் (பிசி, எம்பிசி,எஸ்சிஎஸ்டி, பொது) சேர்ந்தவர்.

அந்த வீடுகளின் திருமணமானவர்கள் எத்தனை பேர், கழிப்பறைகள் எத்தனை, எத்தனை குளியல் அறைகள் உள்ளன. இணையவசதி உள்ளதா. கணிணி அல்லது லேப்டாப் உள்ளதா, ரேடியோ உள்ளதா, ஸ்மார்ட்போன், டெலிபோன், மொபைல் உள்ளதா, இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளதா, வீட்டில் உள்ளவர்களின் தொலைப்பேசி எண்கள் உள்ளிட்ட சில விவரங்கள் கேட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

English summary
Details of the Census for 2021 are published in the tamil nadu govrenmnet Gazette
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X