சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக அரசியலில் புயலை ஏற்படுத்தி இருக்கும் அந்த 18 எம்எல்ஏக்கள் யார் யார் தெரியுமா?

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வர உள்ள நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட அந்த 18 எம்எல்ஏக்களும் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கப்பட்டது செல்லும்.. ஹைகோர்ட் 3வது நீதிபதி அதிரடி தீர்ப்பு- வீடியோ

    சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வர உள்ள நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட அந்த 18 எம்எல்ஏக்களும் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறார்கள்.

    தகுதி நீக்க வழக்கில்18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    Details on 18 MLAs who may make storm in TN politics

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறிய டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் தமிழக அரசியலில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இவர்கள் தமிழக அரசு கொறடாவால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிரான வழக்கில்தான் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

    தமிழக அரசியலை பரபரப்பிற்கு உள்ளாக்கி இருக்கும் அந்த 18 பேர் இவர்கள். பெரம்பூர் வி.வெற்றிவேல், சோளிங்கர் என்.ஜி.பார்த்திபன், சாத்தூர் எஸ்.ஜி.சுப்பிரமணியன், ஓட்டப்பிடாரம் ஆர்.சுந்தர்ராஜ், விளாத்திகுளம் கே.உமாமகேஸ்வரி, பரமக்குடி டாக்டர் எஸ்.முத்தையா, திருப்போரூர் மு.கோதண்டபாணி, பூந்தமல்லி டி.ஏ.ஏழுமலை, நிலக்கோட்டை ஆர்.தங்கதுரை, ஆம்பூர் ஆர்.பாலசுப்பிரமணி, குடியாத்தம் சி.ஜெயந்தி பத்மநாபன், பாப்பிரெட்டிபட்டி பி.பழனியப்பன், அரவக்குறிச்சி வி.செந்தில்பாலாஜி, ஆண்டிபட்டி தங்க.தமிழ்செல்வன், , பெரியகுளம் டாக்டர் கே.கதிர்காமு, தஞ்சாவூர் எம்.ரங்கசாமி, அரூர் ஆர்.முருகன், மானாமதுரை சோ.மாரியப்பன் கென்னடி ஆகியோர்தான் அந்த 18 பேர்.

    [18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு.. உச்சகட்ட பரபரப்பு]

    வி.வெற்றிவேல்- இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் பெரம்பூர் தொகுதியில் வெற்றிவேல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் வெற்றிபெற்றது செல்லாது என்று வழக்கு தொடுக்கப்பட்டு, பின் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

    என்.ஜி.பார்த்திபன்- சோளிங்கர் தொகுதியில் வெற்றி பெற்றவர். இவர் ஒரு பி.ஏ.பட்டதாரி ஆவார். இவர் 15 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

    ஆர்.சுந்தர்ராஜ் - ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக சார்பில் வென்றவர் ஆர்.சுந்தர்ராஜ். ஆர்.சுந்தர்ராஜ் இதில் வெறும் 493 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவருக்கு எதிராக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நூல் இழையில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

    எஸ்.ஜி.சுப்பிரமணியன் - சாத்தூரை பூர்வீகமாக கொண்டவர் எஸ்.ஜி.சுப்பிரமணியன். அதே தொகுதியில் போட்டியிட்டு இவர் வெற்றிபெற்றார்.

    கே.உமாமகேஸ்வரி - தூத்துக்குடியை சேர்த்தவர் கே.உமாமகேஸ்வரி. இவர் விளாத்திகுளம் தொகுதியில் வெற்றிபெற்றார்.

    டாக்டர் எஸ்.முத்தையா- ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் டாக்டர் எஸ்.முத்தையா. இவர் பரமக்குடி தொகுதியில் வெற்றிபெற்றார்.

    மு.கோதண்டபாணி- காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மு.கோதண்டபாண. இவர் திருப்போரூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

    டி.ஏ.ஏழுமலை- சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர் டி.ஏ.ஏழுமலை. இவர் பூந்தமல்லி தொகுதியில் திமுகவின் கோட்டையிலேயே வென்றார்.

    ஆர்.தங்கதுரை- திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆர்.தங்கதுரை. இவர் நிலக்கோட்டை தொகுதியில் வெற்றி பெற்றவர்.

    ஆர்.பாலசுப்பிரமணி- வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆர்.பாலசுப்பிரமணி. இவர் ஆம்பூர் தொகுதியில் வெற்றிபெற்றார்.

    சி.ஜெயந்தி பத்மநாபன்- வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சி.ஜெயந்தி பத்மநாபன். இவர் குடியாத்தம் தொகுதியில் வெற்றிபெற்றார்.

    பி.பழனியப்பன் - பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்தவர் பி.பழனியப்பன். இவர் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் வெற்றிபெற்றார்.

    வி.செந்தில்பாலாஜி - கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வி.செந்தில்பாலாஜி. இவர் அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றிபெற்றார்.

    தங்க.தமிழ்செல்வன்- தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் தங்க.தமிழ்செல்வன். இவர் ஆண்டிபட்டி தொகுதியில் வெற்றிபெற்றார்.

    டாக்டர் கே.கதிர்காமு- தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் டாக்டர் கே.கதிர்காமு. இவர் பெரியகுளம் தொகுதியில் வெற்றிபெற்றார்.

    எம்.ரங்கசாமி- தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் எம்.ரங்கசாமி. இவர் தஞ்சாவூர் தொகுதியில் வெற்றிபெற்றார்.

    ஆர்.முருகன்- தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆர்.முருகன். இவர் அரூர் தொகுதியில் வெற்றிபெற்றார்.

    சோ.மாரியப்பன் கென்னடி- சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் சோ.மாரியப்பன் கென்னடி. இவர் மானாமதுரை தொகுதியில் வெற்றிபெற்றார்.

    English summary
    Details on 18 MLA's who may make storm in TN politics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X