சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடித்த தாய்ப்பாலை மறந்து.. கொடூரமாக கொன்ற மகள்.. கள்ளிப்பாலுக்குத் தகுதியானவர் என மக்கள் ஆவேசம்!

Google Oneindia Tamil News

சென்னை: திருவள்ளூரில் காதலுக்காக பெற்ற தாயையே மகள் கொன்ற நிலையிலும் அந்த வருத்தம் துளி கூட இல்லாமல் போலீஸாருடன் வாக்குவாதம் செய்து மிடுக்காக நடந்து கொண்ட தேவிப்பிரியாவை பார்க்கும் போது பெண் பிள்ளைகளை பெற்ற தாய்களுக்கு அதிர்ச்சியாகவே உள்ளது.

திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேயபுரம் 8-ஆவது தெருவை சேர்ந்தவர் திருமுருகநாதன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு சாமுண்டீஸ்வரி, தேவிப்பிரியா என்ற இரு மகள்கள் இருந்தனர்.

இதில் தேவிப்பிரியா பேஸ்புக் மூலம் பழகிய முகம் தெரியாத ஒருவரை இரு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதை தாயார் பானுமதி ஏற்கவில்லை, எதிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தேவிப்பிரியா, காதலனுடன் சென்று வாழ்க்கை நடத்துவதற்கு இடைஞ்சலாக இருந்த தாயை காதலனின் நண்பர்களை வைத்து கொலை செய்து விட்டார்.

பேஸ்புக் காதல்.. நண்பர்களுடன் சேர்ந்து பெற்ற தாயை கொன்ற மகள் கைது.. திருவள்ளூரில் பரபரப்புபேஸ்புக் காதல்.. நண்பர்களுடன் சேர்ந்து பெற்ற தாயை கொன்ற மகள் கைது.. திருவள்ளூரில் பரபரப்பு

வாக்குவாதம்

வாக்குவாதம்

இதை விட அதிர்ச்சி, கொஞ்சம் கூட வருத்தமோ, கவலையோ தேவிப்பிரியாவிடம் இல்லை. தேவிப்பிரியாவையும், அவரையும் நண்பர்களையும் போலீஸார் அழைத்து சென்றபோது அவர்களுடன் தேவிப்பிரியா வாக்குவாதம் செய்தது அனைவரையும் மிரள வைத்தது.

ஆவேசம்

ஆவேசம்

தாயை கொன்ற குற்ற உணர்ச்சி, கவலை எவ்வித பதற்றமும் இல்லாமல் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்த தேவிப்பிரியா அந்த இடத்தில் திமிராகவும் மிடுக்காகவும் நடந்து கொண்டதை அந்த ஊர் மக்கள் பார்த்து "இவளுக்கெல்லாம் தாய்ப்பாலுக்கு பதில் கள்ளிப்பால் கொடுத்திருக்கலாம்" என ஆவேசத்துடன் கூறினர்.

செய்தித்தாள்

செய்தித்தாள்

அந்த அளவுக்கு முகம் தெரியாத ஒரு காதல் கண்களை மறைத்துவிட்டது. முகம் தெரிந்தவர்களே இன்று பெண்களை தங்கள் வலையில் விழ வைக்க ஏராளமான தகிடுதத்தங்களை செய்து இறுதியில் அவர்களின் நோக்கம் நிறைவேறியவுடன் டிஸ்யூ பேப்பர் போல் தூக்கி எறிந்து விடும் சம்பவங்கள் அன்றாடம் செய்தித்தாள்களில் வருகிறது.

பாதிப்புகள்

பாதிப்புகள்

ஒரு தாய் தனது குழந்தையை அது சிசுவாக வளர்வதிலிருந்து தான் கல்லறைக்கு செல்லும் வரை பூப்போல் பார்த்து கொள்கிறாள். ஆனால் இன்று தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மத்தியில் வளரும் குழந்தைகள், மனதளவில் பெரும் பாதிப்புகளை ஏந்தியபடிதான் வளர்கிறார்கள்.

கவனம்

கவனம்

கல்லூரி காலத்தில் மற்றவர்கள் வைத்திருக்கும் செல்போனை பார்த்துவிட்டு தனக்கும் வேண்டும் என அடம்பிடித்து வாங்கும் தேவிப்பிரியாக்கள், இது போல் பேஸ்புக்கில் முகம் தெரியாத நபர்களுக்காக உயிர் கொடுத்த தன்னையே கொன்றுவிடுவார் என்பது அப்பாவி பானுமதிகளுக்கு தெரிவதில்லை. அந்த அளவுக்குத்தான் தாய்களின் உலகம் உள்ளது.

இனியாவது செல்போனே உலகம் என்று பெண் பிள்ளைகள் இருந்தால் பெற்றவர்கள் கவனமாக இருக்க வேண்டியது நல்லது

English summary
Tiruvallur girl Devipriya who murders her mother for facebook love, didnt show any sadness in her face for her mom death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X