சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உள்நாட்டு விமான போக்குவரத்து: பயண நேரங்களின் அடிப்படையில் 7 வகையாக பிரித்து கட்டணங்கள் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: உள்நாட்டு விமான போக்குவரத்து 7 வகைகளாக பிரிக்கப்பட்டு கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா லாக்டவுனால் விமான சேவைகளும் நாடு முழுவதும் நிறுத்தப்பட்டன. சுமார் 2 மாதங்களுக்கு மேலாக விமான சேவைகள் இயக்கப்படவில்லை.

அண்மையில் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து வரும் 25-ந் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சோதனை மேல் சோதனை! பெங்களூருவில் கொரோனா குவாரண்டைன் ஹோட்டல் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது!சோதனை மேல் சோதனை! பெங்களூருவில் கொரோனா குவாரண்டைன் ஹோட்டல் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது!

பயண நேரத்தின் அடிப்படையில்

பயண நேரத்தின் அடிப்படையில்

தற்போது உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விமானப் போக்குவரத்தை 7 வகைகளாகப் பிரித்து இந்த கட்டணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பயண நேரத்தின் அடிப்படையில் இது பிரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, சென்னை- பெங்களூர்; சென்னை -கோவை செல்ல ரூ2,000 முதல் ரூ6,000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்ல ரூ 3,500 முதல் ரூ10,000 வரை கட்டணமும் சென்னையில் இருந்து கவுஹாத்தி வரை செல்ல ரூ5,500 முதல் ரூ15,700 வரை கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கோவை- டெல்லி செல்ல ரூ 6,500 முதல் ரூ18,600 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

40 நிமிட பயண நேரம்

40 நிமிட பயண நேரம்

அதாவது பயண நேரம் 40 நிமிடங்களுக்கு குறைவாக உள்ள இடங்களுக்கு ரூ2,000 முதல் ரூ6,000 வரை கட்டணம். 40 முதல் 60 நிமிட பயண நேரத்துக்கான கட்டணம் ரூ2,500 முதல் ரூ7,500 வரை. 60 முதல் 90 நிமிடங்கள் வரையிலான பயண நேரத்துக்கான கட்டணம் ரூ3,000 முதல் ரூ9,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டெல்லி -மும்பை பயண கட்டணம்

டெல்லி -மும்பை பயண கட்டணம்

90 முதல் 120 நிமிட நேர பயணத்துக்கான கட்டணம் - உதாரணமான டெல்லி-மும்பை பயண கட்டணமானது ரூ3,500 முதல் ரூ10,000 வரை இருக்கும். 120 முதல் 150 நிமிட நேர பயணம் அதாவது டெல்லி- பெங்களூரு பயணம் எனில் ரூ4,500 முதல் ரூ13,000 வரை கட்டணம்.

கோவை டூ டெல்லி பயண கட்டணம்

150 முதல் 180 நிமிட நேர பயணம் - அதாவது டெல்லி- இம்பால் வழித்தடம் எனில் ரூ5,500 முதல் ரூ15,700 வரை கட்டணம் பெறப்படும், 180 முதல் 210 நிமிட நேரம்- டெல்லி டூ கோவை வழித்தடம் எனில் ரூ6,500 எனில் ரூ18,600 வரை என கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளனர்.

English summary
Directorate General of Civil Aviation DGCA has released a list of the lower and upper limits of domestic flight ticket fares.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X