சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிஜிபி சைலேந்திரபாபுவின் கவனத்திற்கு வந்த நெல்லை காவலர் விவகாரம்.. உடனே அதிரடியாக போட்ட உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை : காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டால் உடனே அவர்களை உயர்அதிகாரிகள் விடுவிக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுளளார். மேலும், அப்படி ஒரு வாரத்தில் விடுவிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். திருநெல்வேலியில் காவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது.

Recommended Video

    பழி வாங்கும் படலம்..ஆயுதப்படை காவலர் கண்ணீர் Audio | Tirunelveli Police

    கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ், நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். அலெக்ஸ் சில வாரங்களுக்கு முன்பு கடலூருக்கு மாற்றப்பட்டார், ஆனால் அவர் குறிப்பிட்ட அதிகாரியால் விடுவிக்கப்படவில்லை.

    8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது! 8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது!

    இதனிடையே கடலூரில் தங்கியிருந்த அவரது மனைவிக்கு கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டு அவரது குழந்தை பிறந்த அடுத்த நாளே இறந்தது. காவலர்களுக்கு உடனடியாக நான்கு நாட்கள் விடுப்பு வழங்கப்பட்டாலும், அவர் தனது மனைவியுடன் இருக்க விரும்பினார். அத்துடுன் குழந்தைக்கு கடைசி சடங்குகளையும் செய்ய விரும்பினார். ஆனால் இதற்கு உயர்அதிகாரி அனுமதி மறுத்தார். இதனால் காவலர் அலெக்ஸ் தற்கொலைக்கு முயன்றார். அத்துடன் ஆடியோவாக பேசி சமூக வலைதளத்தில் வெளியிட்டால் இந்த விவகாரம் காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவின் கவனத்திற்கு வந்தது.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    இதையடுத்து காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டால் உடனே அவர்களை உயர்அதிகாரிகள் விடுவிக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுளளார். மேலும், அப்படி விடுவிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

    நிர்வாக காரணம்

    நிர்வாக காரணம்

    இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட சுற்றறிக்கையில், காவல்துறையில் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் இடமாற்றம் அல்லது புதிய பொறுப்பு தலைமை அலுவலகத்தில் இருந்து கோரிக்கைகள் அல்லது நிர்வாக காரணங்களால் வழங்கப்படுகிறது. இந்த உத்தரவை குறிப்பிட்ட பிரிவின் அதிகாரிகள் முறையாக பின்பற்றி உடனே விடுவிக்க வேண்டும்.

    கடினமான சூழல்

    கடினமான சூழல்

    ஆனால் இடமாற்றங்கள் வழங்கப்பட்ட பணியாளர்கள் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளால் சரியாக நடத்தப்படவில்லை மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட பிரிவில் இணைந்ததற்கு அவர்கள் தங்கள் யூனிட்டிலிருந்து சரியான நேரத்தில் விடுவிக்கப்படவில்லை என்பது விரும்பத்தகாதது. இது குறிப்பிட்ட காவர்களுக்கும் நிர்வாகத்திற்கும் அதிக கடினத்தன்மையையும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது .

    தலைமை அலுவலக உத்தரவுகள் மட்டுமின்றி மண்டல மற்றும் ரேஞ்ச் அலுவலகங்களால் வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவுகளும் சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரிகளால் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்ற புகார்கள் வருகின்றன.

    பணி மாற்றம்

    பணி மாற்றம்

    எனவே அனைத்து யூனிட் அதிகாரிகளும் தலைமை அலுவலகம், மண்டல மற்றும் ரேஞ்ச் அலுவலகங்களில் இருந்து இடமாற்ற உத்தரவுகளை உடனடியாக வழங்க வேண்டும் மற்றும் ஒரு வாரத்திற்குள் புதிய பொறுப்பில் இணைவதை உறுதி செய்ய வேண்டும்.

    டிஜிபி சைலேந்திபாபு

    டிஜிபி சைலேந்திபாபு

    மேற்கண்ட அறிவுறுத்தல்களில் ஏதேனும் கவனக்குறைவு மற்றும் உத்தரவிற்கு இணங்காதது தெரியவந்தால், அது அதிருப்தி தரும் செயலாக பார்க்கப்படும். அத்துடன் சட்டபூர்வமான அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்தில் அலட்சியம் காட்டினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

    English summary
    "Therefore all the unit officers are directed to ensure that the transfer orders issued from Chief Office, Zonal and Range Offices should be given immediate effect and should be complied within a week" noted a circular from head of the police force, DGP C Sylendra Babu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X