சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேர்தல் பணியில் இருந்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் விடுவிப்பு.. அசுதோஸ் சுக்லா நியமனம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி டிகே ராஜேந்திரன் தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டடுள்ளார். அவருக்கு பதிலாக சிறைத்துறை டிஜிபியாக உள்ள அசுதோஸ் சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பணப்பட்டுவாடா உள்பட பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றன.

DGP TK rajendran released from election work, now ashutosh shukla as election dgp

எதிர்க்கட்சியான திமுக தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்றால், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி டிகே ராஜேந்திரன், வடக்கு மண்டல ஐஜி நாகராஜ், மத்திய மண்டல ஐஜி வரதராஜு, மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா உளத்துறை ஐஜி சத்யமூர்த்தி உள்ளிட்ட 10 அதிகாரிகளை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்தது.

திமுக அளித்த புகாரில் டிஜிபி டிகே ராஜேந்திரன் குட்கா வழக்கில் சிக்கியுள்ளதாகவும், அவர் கடந்த சட்டசபை தேர்தலின் போதே ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் இதனால் அவர் போலீஸ் கமிஷ்னர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தது.

நைட்டி அணிந்த பெண்ணுடன் உல்லாசமாக பெரியகுளம் வேட்பாளர் கதிர்காமு.. பெரும் சிக்கலில் அமமுகநைட்டி அணிந்த பெண்ணுடன் உல்லாசமாக பெரியகுளம் வேட்பாளர் கதிர்காமு.. பெரும் சிக்கலில் அமமுக

இந்த புகாரினை விசாரித்த தேர்தல் ஆணையம், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி டிகே ராஜேந்திரன் தேர்தல் பணிகளில் ஈடுபடக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. புதிய தேர்தல் டிஜிபியாக தற்போது சிறைத்துறை டிஜிபியாக உள்ள அசுதோஸ் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று இரவு பிறப்பித்தது. அதேநேரம் தேர்தல் பணியில் இருந்து மட்டும் தான் ராஜேந்திரன் விடுவிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தொடர்ந்து பணியாற்றுவார்.

English summary
DGP TK rajendran released from election work, now ashutosh shukla as election dgp : election commission order
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X