சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

10-ம் தேதி முதல் காவலர்களுக்கு விடுப்பு கிடையாது... டி.ஜி.பி.சுற்றறிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: வரும் 10-ம் தேதி முதல் காவலர்களுக்கு விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது என டி.ஜி.பி. திரிபாதி அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

விடுப்பு தொடர்பாக மறு அறிவிப்பு வரும் வரை இந்த அறிவிப்பு நடைமுறையில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அயோத்தி வழக்கில் அடுத்தவாரம் தீர்ப்பு வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனக் கூறப்படுகிறது.

ஜெயலலிதா நினைவிடம்... இரவு பகலாக நடைபெறும் பணிகள்ஜெயலலிதா நினைவிடம்... இரவு பகலாக நடைபெறும் பணிகள்

விடுப்பு கிடையாது

விடுப்பு கிடையாது

காவலர்களுக்கு 10-ம் தேதி முதல் விடுப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் டி.ஜி.பி.திரிபாதி. அனைத்து காவல் நிலையங்களிலும் முழு எண்ணிக்கையில் காவலர்கள் பணியில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என காவல்துறை உயரதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அயோத்தி வழக்கு

அயோத்தி வழக்கு

அயோத்தில் வழக்கில் அடுத்த வாரம் ஏதாவது ஒரு நாள் தீர்ப்பு வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனக் கூறப்படுகிறது. இருப்பினும், டி.ஜி.பி. அனுப்பிய சுற்றறிக்கையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அனைத்து காவலர்களையும் திரட்டும் பொருட்டு இந்த அறிவிப்பு வெளியிடுவதாக கூறப்படுள்ளது.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அனைத்து காவல்துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காவல்துறை வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உள்துறை எச்சரிக்கை

உள்துறை எச்சரிக்கை

நாடே எதிர்பார்க்கும் அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு மத்திய உள்துறை அமைச்சகமும் பல்வேறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

English summary
Dgp tripathy announced, There is no leave for the police from the november 10th
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X