எதையோ பறிகொடுத்த மாதிரி தனுஷ்.. பிட்னஸ் சென்டரில் ஐஸ்வர்யா.. பிரிவின் பின்னணி.. நடந்தது என்ன?
சென்னை: தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து சில தகவல்கள் வட்டமடித்து வருகின்றன.. அது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள், கோலிவுட் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 2 தினங்களாக தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து செய்திகள் பரபரப்பாக வெளியாகி கொண்டிருக்கிறது.. விவாகரத்து தொடர்பாக தனுஷ் வெளியிட்டிருந்த அறிவிப்பில், 18 ஆண்டுகளாக நண்பர்களாக, துணையாக, பெற்றோர்களாக வாழ்ந்தோம்.
தற்போது நாங்கள் ஒன்றாக பிரிய உள்ளோம். எங்களை நாங்கள் புரிந்து கொள்ள இந்த பிரிவை ஏற்படுத்தியுள்ளோம். எங்களது இந்த பிரிவை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்திருந்தார்.
இமேஜ் முக்கியமில்ல! ரஜினி தந்த அட்வைஸ்.. கடைசி வரை கஷ்டப்பட்ட ஐஸ்வர்யா.. தனுஷுக்கு இது பெரிய ரிஸ்க்

அதிர்ச்சி
அதேபோல, ஐஸ்வர்யாவும் இதே அறிவிப்பை வெளியிட்டு அப்பிரிவை உறுதி செய்திருந்தார்.. இந்த தகவல்கள் சினிமா வட்டாரங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.. இருவரும் குழந்தைகளுக்காக சேர வேண்டும் என்று, நலம்விரும்பிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.. உண்மையிலேயே தம்பதிக்குள் என்ன பிரச்சனை என்று உறுதியாக தெரியவில்லை.. ஆனால், சில அனுமானங்களும், யூகங்களும் சினிமா வட்டாரங்களில் பரபரத்து வருகிறது.. அந்த வகையில், சமீபத்தில் முன்னணி நடிகையின் விவாகரத்துக்கு காரணமே தனுஷ்தான் என்று சொல்லப்படுகிறது..

படுக்கையறை காட்சி
தொடர்ந்து 2வது முறையாக ஹாலிவுட்டில் தனுஷ் நடித்து வரும் நிலையில், முத்தக்காட்சி, படுக்கையறை காட்சிகள் வரை செல்வதும், குடும்ப உறவில் விரிசல் விழ காரணம் என்று யூகங்களாக சொல்லப்படுகிறது. இதனிடையே, தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் என்ன என்பது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.. அதில், தனுஷ் - ஐஸ்வர்யா தரப்புக்கு நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்தபோது கிடைத்த சில தகவல்களை அந்த ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது..

உழைப்பாளி
அதில் "தனுஷை பொறுத்தவரை கடினமான உழைப்பாளி.. தொழிலுக்கு முக்கியத்துவம் தருபவர்.. ஷூட்டிங் காரணமாக நிறைய இடங்களுக்கு சென்று வருவது வழக்கம்.. இதில் பெரும்பாலும் அவுட்டோரில் ஷூட்டிங் நடக்கும் என்பதால், இதுவும்கூட தம்பதிக்கு இடையே பிரச்சனை ஏற்பட காரணமாக இருந்திருக்கலாம்.. கடந்த சில வருடங்களாகவே இவர்களுக்குள் பிரச்சனை இருந்து வந்துள்ளது.. எப்போதெல்லாம் ஐஸ்வர்யாவுடன் பிரச்சனைகள் தகராறுகள் வருகிறதோ, அப்போதெல்லாம் புதுபுது படங்களில் கமிட் ஆனார் தனுஷ்..

சினிமா
நிறைய படங்களை அதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான் ஒப்புக் கொண்டு நடித்தார்.. எப்போதுமே தனுஷ் வெளிப்படையாக இருக்க மாட்டார்.. யாரிடமும் எந்த பிரச்சனை பற்றியும் பகிர்ந்து கொள்ளவும் மாட்டார்.. அதனால், தன்னுடைய மொத்த கவனத்தையும் சினிமாவிலேயே திருப்பினார்.. தொழிலிலேயே தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.. எனினும் இந்த 6 மாதமாக கருத்து மோதல்கள் அதிகரித்துவிட்டது..

பிட்னஸ் சென்டர்
ஆற்றங்கீரே பட புரோமாஷனில் தனுஷை பார்த்தாலே நன்றாக தெரியும்.. அவர் எதையோ பறிகொடுத்த மாதிரியே இருந்திருப்பார்.. பழைய உற்சாகம் அவரிடம் காணப்படவில்லை.. அதேபோல, ஐஸ்வர்யாவும், பிட்னஸ்களிலும், தொண்டு நிறுவனங்களிலும் கவனத்தை செலுத்த தொடங்கினார்.. தனியாக தொடங்கி நடத்தி கொண்டிருந்த யோகா சென்டரிலும் முழு கவனம் செலுத்தி வந்துள்ளார்... ஒருகட்டத்தில் கணவன் மனைவி இருவருமே, பிரிந்துவிடுவது பற்றி யோசிக்க தொடங்கினர்..

குழந்தைகள்
இதற்காக சமீபத்தில் இருவருமே உட்கார்ந்து பேசியுள்ளனர்.. அப்போது இவர்களின் முக்கிய பிரச்சனையாக அவர்களின் குழந்தைகள் இருந்துள்ளனர்.. இருவருமே குழந்தைகள் நலனில் அக்கறை இருப்பவர்கள்.. பிரிவது என்று முடிவெடுத்தாலும், குழந்தைகளை பற்றிய கவலை அதிகமாக இவர்களுக்கு இருந்துள்ளது.. முக்கியமாக, இந்த பிரிதலை அவர்களிடம் எப்படி சொல்வது என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது.. ஒருவருக்கொருவரின் மகிழ்ச்சிக்கான முக்கியத்துவம் அவசியம் என்பதால், பிரிவது என்பது அவர்களுக்குள் தவிர்க்க முடியாத முடிவை எடுக்க வைத்துள்ளது..

பொதுநிகழ்ச்சி
அதேசமயம் இருவருக்கும் பொதுவான விஷயம் குழந்தைகள் என்பதால், இருவரின் பொறுப்பிலும் குழந்தைகள் இருக்க வேண்டும் என்றும் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.. மனப்பூர்வமாக, இரு தரப்பிலும் பேசியே இந்த விவாகரத்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், பொதுநிகழ்ச்சி, பொதுஇடங்களில் இவர்கள் நேருக்கு நேர் சந்தித்து கொள்ளக்கூட வாய்ப்புள்ளது" என்று தனுஷூக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றவாம்..!