சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என் கேள்விக்கு என்ன பதில்...அசர வைக்கும் திமுக எம்.பி...திணறும் அதிகாரிகள்

Google Oneindia Tamil News

சென்னை: சாலைப்பணிகள் தொடர்பாக தருமபுரி மக்களவை உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் எழுப்பிய கேள்விகளுக்கு அவர்களால் பதிலளிக்க முடியாமல் திணறினர்.

தருமபுரி திமுக எம்.பி.செந்தில்குமார் தொகுதி முழுவதும் ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவதால் அரசு அதிகாரிகள் திகில் அடைந்துள்ளனர். மக்களிடம் வரும் புகார்களை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக களத்தில் குதித்து அதற்கான தீர்வை ஏற்படுத்தி தருகிறார் செந்தில்குமார் எம்.பி. மேலும், மாதந்தோறும் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அறிக்கை தயார் செய்து அதை தலைமைக்கு அனுப்பி வைக்கிறார்.+

dharmapuri dmk mp dr senthilkumar inspection on road work

இப்படி படு சுறுசுறுப்பாக இயங்கி வரும் செந்தில்குமார் எம்.பி.யிடம் அயோத்தியாப்பட்டணம் முதல் பள்ளிப்பட்டு வரையிலான சாலை பழுதடைந்து நிலையில் உள்ளதால் அடிக்கடி விபத்து நிகழ்வதாக பொதுமக்கள் புகார் கூறியிருந்தனர். இதையடுத்து நெடுஞ்ச்சாலைத்துறை அதிகாரிகளை நிகழ்விடத்திற்கு வர வைத்து கேள்விகளால் குடைந்தெடுத்து விட்டார்.

35 கி.மீ.சாலைப்பணிக்கு டெண்டர் விடப்பட்டு 7 மாதங்களாகியும் ஒப்பந்தக்காரர் பணியை தொடங்காதது ஏன் என செந்தில்குமார் எம்.பி.வினவினார். அதை பற்றி தமக்கு தெரியாது எனவும், அடுத்த வாரத்தில் பணியை தொடங்குவார் என்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி அலட்சிய பதில் அளித்தார். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற செந்தில்குமார், ஒப்பந்ததாரருக்கு போன் போடச் சொல்லி, எப்போது பணியை தொடங்கி எப்போது முடிப்பீர்கள் என்பதை கூற வேண்டும் கிடுக்கிப்பிடி போட்டார்.

dharmapuri dmk mp dr senthilkumar inspection on road work

இதனால் வேறு வழியின்றி வரும் புதன்கிழமை பணியை தொடங்குவதாக நெல்லையை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ற ஒப்பந்ததாரர் செந்தில்குமாரிடம் உறுதியளித்தார். செந்தில்குமாரின் ஆக்‌ஷனை திமுகவினர் மட்டுமல்லாமல் அதிமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினரும் பாராட்டினர்.

English summary
dharmapuri dmk mp dr senthilkumar inspection on road work
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X