சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி வருகைக்கு தானியங்கி பேனர்.. காற்றடித்தால் கீழே விழாது.. மேலே செல்லும்.. தருமபுரி எம்பி நக்கல்

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் மோடி வருகையினை ஒட்டி தானியங்கி பேனரை வைக்க இருக்கிறார்கள் என மாநில அரசை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை துரைப்பாக்கம் அடுத்துள்ள மேட்டுக்குப்பம் பகுதியில் இயற்கை சார்ந்த ஒப்பனை பொருட்கள், காய்கறிகள் கொண்ட புதிய கடையினை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில் 85 சதவீதம் விவசாயம் கொண்ட தமிழ்நாட்டில் செயற்கை உரங்களினால் பாதிப்படைந்து வருகிறோம். இதனை அடுத்து விவசாயம் சார்ந்த பல்கலைக்கழகம் என்ற புதிய திட்டத்தினை தருமபுரி மாவட்டத்தில் கொண்டு வர உள்ளோம்.

அமமுகவை கலைப்பார் தினகரன்.. எடப்பாடி ஆட்சியை ஆதரிப்பார் சசிகலா- பெங்களூர் புகழேந்தி ஆரூடம்அமமுகவை கலைப்பார் தினகரன்.. எடப்பாடி ஆட்சியை ஆதரிப்பார் சசிகலா- பெங்களூர் புகழேந்தி ஆரூடம்

செயல்முறைகள்

செயல்முறைகள்

இதன் மூலமாக காலகாலமாக நாம் பயன்படுத்தி வந்த பாரம்பரிய செயல்முறைகள் குறித்தும் வெளிநாடுகளின் செயல்திட்ட முறைகள் குறித்தும் வகுப்புகள் எடுக்கப்படும் என தெரிவித்துக் கொண்டார். மோடி வருகையினை ஒட்டி பேனர் வைக்க உத்தரவு பிறப்பித்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறுகையில் அரசு கட்சிகள் வைக்கும் பேனர் மற்றும் அரசாங்கம் வைக்கும் பேனர் என இரண்டாக பிரித்து இருக்கின்றனர். அரசியல் கட்சிகள் வைக்கும் பேனர் காற்றடித்தால் கீழே விழும் அடிபடும்.

நிதி

நிதி

ஆனால் அரசாங்கம் வைக்கும் பேனரானது வலுவானது. அவை எந்தவொரு ஊன்றுகோலும் இன்றி நிக்க கூடியது. இருசக்கர வாகன ஓட்டிகள் வரும்போது பேனரானது மேலே செல்லும் திறன் கொண்டது என்றார். தருமபுரியில் மக்கள் பிரச்சனைகள் குறித்து தொடரும் போராட்டங்கள் குறித்து கேட்டபோது அவர் கூறுகையில் மக்களுக்கு பயன்தரக் கூடிய பல நல்ல திட்டங்கள் மாநில அரசின் மூலமாக நிதிகள் ஒதுக்கப்படாமல் இருக்கிறது.

தனியார்மயம்

தனியார்மயம்

அதற்குரிய அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. மாநில அரசு செய்யாத நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த உடன் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றார். ரயில்வே துறை தனியார்மயமாக்குவது குறித்து கேள்வி எழுப்பியதற்கு அவர் கூறுகையில் ரயில்வே மட்டுமல்லாது அனைத்து துறையையும் தனியார்மயமாக்குவது தான் ஆட்சியாளர்களின் நோக்கம்.

ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனம்

பிஎஸ்என்எல்லில் 3ஜி, 4ஜி இதுவரை விடவில்லை. ஊழியர்களுக்கு சம்பள பாக்கி இருப்பதாக தெரிவித்து சரிவை கணக்கு காட்டி தனியார்மயமாக்குவதற்காக எடுக்கும் முயற்சியாகதான் இதை பார்க்கிறோம். கூடிய விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஜியோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

அரசியல் கட்சி

அரசியல் கட்சி

உலகத்திலேயே இந்தியன் ரயில்வே துறையில்தான் அதிக வேலை வாய்ப்பு உள்ளது. அதை தனியார்மயமாக்குவதால் அவர்கள் நிர்யணயிக்கும் விலையைதான் மக்கள் கொடுக்க வேண்டும். எனவே இது பாமர மக்களுக்கு பயன்படாது. அரசியல் கட்சிகள் ஏழை மக்களுக்கு ஏதும் செய்யாமல் மத்திய அரசு அனைத்தையும் தனியார்மயமாக்கி அதானி, அம்பானிக்கு ரிலையன்ஸ் போன்றோர்க்கு ஆதரவாக செயல்படுகிறது என தெரிவித்துக் கொண்டார்.

English summary
Dharmapuri MP Senthil kumar says that State government is putting automatic banners for Modi and Xi Jinping arrival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X