சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திவாகரனும் டெல்லிக்கு வந்துட்டார்.. அப்படீன்னா இத்தனை நாள் கசிந்த விஷயமெல்லாம் உண்மைதான் போல

பியூஷ் கோயலை திவாகரன் தரப்பு சந்தித்து பேசுவதன் பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    இத்தனை நாள் கசிந்த விஷயமெல்லாம் உண்மைதான் போல

    சென்னை: திவாகரனும் அரசியல் சதுரங்கம் விளையாட டெல்லிக்கு வந்துவிட்டார். அப்படின்னா.. இவ்வளவு நாள் கசிந்த விஷயமெல்லாம் உண்மைதான் போல இருக்கிறது.

    ஆரம்பத்தில் டிடிவி தினகரனும், திவாகரனும் ஒன்றாக இருந்து செயல்பட்டவர்கள்தான். கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரெண்டு பேரும் பிரிந்துவிட்டார்கள்.

    அப்போதிலிருந்து ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கியும், விமர்சித்தும் வருகிறார்கள். இதில் கொஞ்சம் ஜாஸ்தியாகவே திட்டி வருவது திவாகரன்தான். தினகரனை விஷக்கிருமி என்று பகிரங்கமாகவே சொன்னார்.

    தினகரனை சாய்க்க முடிவு

    தினகரனை சாய்க்க முடிவு

    இப்போது கொடநாடு விவகாரத்தில்கூட, ஒட்டுமொத்த பேரும் ஆளும்தரப்பு மீது குற்றம் சுமத்தினால், சம்பந்தமே இல்லாமல் தினகரனுக்கு அதில் தொடர்பு உண்டு என்று திவாகரன் மட்டுமே சொன்னார். இப்படி தினகரனை அழிக்க ஏதாவது சாக்கு கிடைக்குமா என்று எதிர்பார்த்து கொண்டே இருந்தவர்தான் திவாகரன்.

    டெல்லியில் முகாம்

    டெல்லியில் முகாம்

    எனவே தினகரனை எதிர்க்கவே அதிமுகவுடன் மறைமுக தொடர்பில் இருக்கிறார் என்றும், அதிலும் பாஜகவுடன் இணைந்தால் தினகரனை எளிதாகவே சாய்க்கலாம் என்ற வியூகத்தை கையில் திவாகரன் கையில் எடுத்ததாகவும், சொல்லப்பட்டது. அதற்காகவே டெல்லியில்கூட கடந்த மாதம் 10-ம் தேதி வாக்கில் திவாகரன் சில நாட்கள் தங்கியதாகவும் தகவல்கள் வெளியாயின.

    பாஜக திட்டம்

    பாஜக திட்டம்

    இந்த நிலையில்தான் நேற்று திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் பியூஷ் கோயலை சந்தித்திருக்கிறார். தங்களுடன் இன்னும் யாருமே கூட்டணி வைக்க முன்வரவில்லையே, பலமான திமுக-காங்கிரஸை உடைக்க இப்போதைக்கு அஸ்திரம் ஏதும் இல்லையே என்று கவலையில் பாஜக கிடந்தது. அதற்காக தினகரனையும் சசிகலாவையும் பகைத்துக்கொண்ட திவாகரனை பாஜக பயன்படுத்தி கொள்ளவும் தயாரானது. இந்த நேரத்தில்தான் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது.

    கூட்டணி வைக்க திட்டமா?

    கூட்டணி வைக்க திட்டமா?

    இந்த சந்திப்பின் பின்னணி என்னவாக இருக்கும் என்றால், ஒன்று, பாஜக-அதிமுக கூட்டணியை பலப்படுத்த திவாகரன் முன்வந்திருக்கலாம். அல்லது, தாங்கள் தொடங்கிய அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சி பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்புவதாகவும் தெரிவித்திருக்கலாம்.

    இரட்டை இலை லஞ்சம்

    இரட்டை இலை லஞ்சம்

    இதை தவிர இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது, தினகரன் திமுக பக்கம் போய்விடாமல் தன் பக்கம் இழுக்கவும் பாஜக ஒரு பக்கம் முயற்சி செய்து வருவதாக கூறப்பட்டது. அதனால்தான் டெல்லி ஹைகோர்ட்டில் இரட்டை இலைக்கு லஞ்சம் தரப்பட்ட வழக்கைகூட ஒத்திவைக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

    முற்றி வரட்டும்

    முற்றி வரட்டும்

    எனவே தினகரன் பாஜகவுக்குள் நுழைய விடாமல் செய்யவும் திவாகரன் பாஜக தரப்பை முந்திக் கொண்டு சந்தித்தாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். எந்த விவகாரமானால் என்ன? கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்துதானே ஆகணும்... பொறுத்திருந்து பார்ப்போம்!

    English summary
    Reasons behind the Dhivakaran's Son Jai Anand met Piyush Goyal in Delhi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X