சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அம்பையர ஒழுங்கா நோ-பால் பார்க்க சொல்லுங்க.. தோனி க்ளவுச பார்க்க வந்துட்டாங்க.. ஐசிசிக்கு செம குட்டு

Google Oneindia Tamil News

Recommended Video

    #DhoniKeepTheGloves | ஐசிசிக்கு எதிராக ரசிகர்கள் கோபம்! பின்னணி என்ன?- வீடியோ

    சென்னை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில், இந்தியத் துணை ராணுவத்தின் தியாகத்தை உணர்த்தும் 'பலிதான்' முத்திரையை, இந்திய விக்கெட் கீப்பர் தோனி தனது கீப்பிங் கையுறையில் பதித்து இருந்தார். 2011ம் ஆண்டு தோனிக்கு ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் பதவி தரப்பட்டது. 2015ல், துணை ராணுவப் படைப் பிரிவில் தோனி சிறப்பு பயிற்சி மேற்கொண்டார்.

    இதுபோன்ற காரணங்களால், தோனி, இந்த முத்திரையை தனது கையுறையில் பயன்படுத்தினார். ஆனால், இந்த முத்திரையை நீக்குமாறு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அறிவுறுத்தியுள்ளது.

    பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர், தோனி, விளையாட வந்துள்ளாரா, அல்லது மகாபாரத போருக்கு வந்துள்ளாரா என கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், இந்திய ரசிகர்களோ தோனி தனது கையுறை முத்திரையை அகற்ற கூடாது என வலியுறுத்தி வருகிறார்கள். டிவிட்டரில், #DhoniKeepTheGlove என்ற ஹேஷ்டேக்கில் அவர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.

    நல்ல நடுவரை போடுங்க

    அம்பயர் செயல்பாடுகளை முன்னுரிமை கொடுத்து திருத்த வேண்டுமே தவிர கையுறை பற்றி கவலைப் படக்கூடாது, என்று ஐசிசிக்கு அட்வைஸ் செய்கிறார் இந்த நெட்டிசன். நேற்று நடந்த உலக கோப்பை லீக் ஆட்டத்தில், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்லுக்கு, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்து மிகப்பெரிய நோபாலாக அமைந்தது. ஆனால் அந்த பந்தில் கிறிஸ் கெயிலுக்கு எல்பிடபிள்யூ அவுட் கொடுத்தார், அம்பயர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்லெட்ஜிங் நிறுத்துக

    டியர் ஐசிசி அம்பயர்களில் தரத்தை உயர்த்துவதிலும், மைதானத்திற்குள் வீரர்கள் ஒருவரை ஒருவர் ஸ்லெட்ஜிங் செய்யாமல் இருக்கவும் கவனம் செலுத்துங்கள். இந்திய துணை ராணுவத்தின் தியாகத்தை குறிப்பதற்கு பொறிக்கப்பட்ட அவரது கையுறைகளை அகற்றுவதில் கவனம் செலுத்த வேண்டாம் என்று தெரிவிக்கிறார் இந்த நெட்டிசன்.

    தேசக்காதல்

    நீங்கள் தோனியின் கையுறை, கால்காப்பு, தலைக்கவம், பேட் அல்லது அவரது ஜெர்சி ஆகியவற்றிலிருந்து ராணுவம் தொடர்பான அம்சங்களை எடுத்து விடலாம். ஆனால் இது நாட்டின் மீதான தோனியின் காதலை, அவர் இதயத்திலிருந்து எடுக்க முடியாது என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

    எங்குமே தேச பக்தி

    கையுறைகள் மட்டும் கிடையாது, அவரது செல்போன் உரையிலும், அவரது தொப்பியும் கூட, தியாகத்திற்கான அடையாளத்தை வைத்துக் கொண்டு உள்ளார். நாம் அவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய நேரம். யாருடைய மனதையும் அவர் புண்படுத்தவில்லை. தனது பெருமையை அவர் தன்னுடன் சுமந்து கொள்கிறார். இதில் தவறில்லை.

    நாட்டுக்கு மரியாதை

    நாட்டுக்கு மரியாதை

    இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் என்ற பெருமை தோனிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே விளம்பரம் செய்வதற்கான பிராண்ட் அந்த சின்னம் கிடையாது. தனது நாட்டிற்கு, மரியாதை செலுத்தும் விதமாக அந்த சின்னத்தை அவர் தனது உறையில் பயன்படுத்துகிறார். இவ்வாறு நெட்டிசன்கள் சரமாரியாக கருத்து கூறி வருகிறார்கள்.

    English summary
    Netizens trolls ICC for asking Dhoni to remove his glove where Army Insignia is appearing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X