சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

78 அடி உயர பாபா சிலை முன்பு நடந்த நவராத்திரி நாட்டிய விழா!

Google Oneindia Tamil News

Recommended Video

    78 அடி உயர பாபா சிலை முன்பு நடந்த நவராத்திரி நாட்டிய விழா!-வீடியோ

    சென்னை: சென்னை முகப்பேர் மேற்கில் உள்ள த்வனி இசை மற்றும் நடனப் பள்ளியில் நேற்று மாலை கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமானோர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    முகப்பேர் மேற்கில் உள்ளது த்வனி இசை மற்றும் நடனப் பள்ளி. இங்கு வயலின், வாய்ப்பாட்டு, புல்லாங்குழல், தபேலா, கீபோர்டு, மிருதங்கம், பரதநாட்டியம், வீணை உள்ளிட்டவை கற்பிக்கப்படுகின்றன.

     Dhwani school of music and Dance conducts music festival at Mogappair, Chennai

    இங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு விருப்பமானவற்றை பயின்று வருகின்றன. இங்கு வயது வித்தியாசமின்றி திருமணமான பெண்களும் வாய்ப்பாட்டு கற்று வருகின்றனர். இந்த பள்ளியை ஸ்ரீனிவாசனும், விஜயந்தினியும் எடுத்து நடத்துகின்றனர்.

    ஸ்ரீனிவாசன் கடந்த 12 ஆண்டுகளாக வாய்ப்பாட்டு, வயலின், வீணை, கீபோர்டு ஆகியவற்றை கற்பித்து வருகிறார். விஜயந்தினி 5 ஆண்டுகளாக பரதக் கலையை சொல்லிக் கொடுத்து வருகிறார். எனினும் இப்பள்ளி தொடங்கப்பட்டு ஓராண்டுதான் ஆகிறது.

     Dhwani school of music and Dance conducts music festival at Mogappair, Chennai

    விஜயந்தினி தனது 7 வயதில் பரதநாட்டியத்தையும் வீணையையும் பயிலத் தொடங்கினார். இவரது குரு மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் பேத்தி சுமதியாவார்.

    நவராத்திரியை முன்னிட்டு சென்னையில் பல்வேறு கோயில்களில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் த்வனி இசை பள்ளி மாணவர்களை வைத்து முகப்பேரில் உள்ள ஸ்ரீலட்சுமி சாய்பாபா கோயிலில் (78 அடி உயர பாபா சிலை) இசை நிகழ்ச்சி நடத்தினர்.

     Dhwani school of music and Dance conducts music festival at Mogappair, Chennai

    இதில் கலந்து கொண்ட குழந்தைகள் வாய்ப்பாட்டு, மிருதங்கம், வீணை, பரதநாட்டியம், பாட்டு ஆகியவற்றை நிகழ்த்தினர். நிகழ்ச்சியின் இறுதியில் கோயில் சார்பில் மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    குருப்பெயர்ச்சி 2018-19: அஸ்வினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களுக்கும் பலன்கள் குருப்பெயர்ச்சி 2018-19: அஸ்வினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களுக்கும் பலன்கள்

    English summary
    Dhwani School of Music and Dance conducts music festival at Sri Lakshmi SAibaba temple Mogappair West, Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X