• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

புலம்பெயர்ந்த சாதனையாளர்கள்: நாசா விண்வெளி பொறியாளர் டாக்டர் ஸ்வாதி மோகனுடன் உரையாடல்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அமெரிக்க துணைத்தூதரகம் "புலம்பெயர்ந்த சாதனையாளர்கள்" என்ற தலைப்பில் இந்திய வம்சாவளியில் வந்த அமெரிக்க விண்வெளி பொறியாளர் டாக்டர் ஸ்வாதி மோகனுடன் ஒரு மெய்நிகர் உரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி ஜூலை 28ஆம் தேதி புதன் கிழமை இந்திய நேரப்படி இரவு 7.00 மணிக்கு நடைபெறும்.

டாக்டர் ஸ்வாதி மோகன், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவில் ஜெட் உந்துசக்தி ஆய்வகத்தில் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டுப் பொறியியல் குழுவில் மேற்பார்வையாளராகப் பணியாற்றுகிறார். அவரே நாசாவின் 2020 செவ்வாய் கிரக திட்டத்துக்கான வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளின் மேற்பார்வையாளர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

"புலம்பெயர்ந்த சாதனையாளர்கள்" என்ற தலைப்பில் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத்தூதரகம் அமெரிக்காவில் சாதனை புரிந்த இந்தியர்கள் தங்கள் வாழ்க்கைப் பயணத்தையும், இந்திய-அமெரிக்க உறவு மேம்பாட்டில் தங்கள் பங்களிப்பு பற்றியும் பேச உரையாடல் தொடர் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்காவின் வர்த்தகம், கல்வி, புது முயற்சிகள், உடல்நலம், மற்றும் அறிவியல் போன்ற பல்வேறு துறைகளிலும் புலம் பெயர்ந்த இந்தியர்களின் பங்களிப்பினை உலகறியச் செய்யும் முயற்சி இது.

Diaspora Diplomacy: Conversation with NASA Aerospace Engineer Dr. Swati Mohan on July 28

இந்த உரையாடல் தொடர் சென்னை அமெரிக்க துணைத்தூதர் ஜூடித் ரேவின் அவர்களால் துவக்கி வைக்கப்படும். "நாற்பது லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் இந்தியாவை பூர்வீகமாக கொண்டுள்ளனர். இந்த முயற்சி, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல், பொருளாதாரம், மற்றும் சமூக உறவுகள் வளரவும், வலுப்பெறவும் உதவிகரமாக இருக்கும். புலம்பெயர்ந்த இந்தியர்களின் குரல் பொதுமக்களைச் சென்றடைவதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்," என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின்போது டாக்டர் ஸ்வாதி மோகன், ஐ,நாவின் விண்வெளியில் பெண்கள் கூட்டமைப்பின் இந்திய கிளையின் ஆலோசகர் தீபனா காந்தி, மாணவர்கள், பத்திரிகையாளர்கள், மற்றும் விண்வெளி ஆர்வலர்களோடு உரையாடுவார். இந்த உரையாடலில், அவரது இந்தியாவுடனான குடும்ப உறவு, அமெரிக்க மேற்படிப்பு, செவ்வாய் கிரக திட்டத்தில் பணியாற்றிய அனுபவங்கள், மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றில் பெண்களின் பங்களிப்பு குறித்த கருத்துக்கள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்வார்.

இந்த மெய்நிகர் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் இந்த லிங்கில் பதிவு செய்து கொள்ளலாம்: https://statedept.zoomgov.com/webinar/register/WN_Zh6CxJU7QyugRH3gJ9FlEg

சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்தின் முகநூல் பக்கத்தில் இந்த நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பாகும்: https://www.facebook.com/chennai.usconsulate/. நிகழ்ச்சியின்போது, கருத்துக்கள் பகுதியில் பார்வையாளர்கள் தங்கள் கேள்விகளைப் பதிவு செய்யலாம். தேர்ந்தெடுக்கப்படும் கேள்விகளுக்கு டாக்டர் ஸ்வாதி மோகன் பதிலளிப்பார்.

"புலம்பெயர்ந்த சாதனையாளர்கள்" வரிசையில் இரண்டாவது நிகழ்ச்சி கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய அமெரிக்க பாடகி பிரியதர்ஷிணியின் இசை நிகழ்ச்சி ஆகும். அது ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெறும். மறுநாள் ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று வளரும் இசைக்கலைஞர்களுக்கு பிரியாவும் அவரது குழுவினரும் ஒரு பணியரங்கினை நடத்துவார்கள்.

  Who Is Sirisha Bandla ? | விண்வெளிக்கு பறக்கும் இந்திய பெண்மணி

  புலம்பெயர்ந்த சாதனையாளர்கள் உரையாடல் தொடரைப் பற்றி: சுந்தர் பிச்சை, சுனிதா வில்லியம்ஸ், விவேக் மூர்த்தி போன்ற சாதனையாளர்கள் மற்றும் ஸ்பெல்லிங் பீ போட்டியின் வெற்றியாளர் முதல் மிகப்பெரிய நிறுவன நிர்வாகிகள் உட்பட அமெரிக்க மத்திய அரசில் குரல் கொடுப்பது வரை அமெரிக்காவில் இந்திய அமெரிக்கார்களின் பங்களிப்பு அசாத்தியமானது. பன்முகக் கலாசாரம் கொண்ட அமெரிக்காவில் இவர்களின் தனித்துவத்தை, சாதனைகளை, அறிவிக்கும் அங்கீகரிக்கும் கொண்டாடும் ஒரு முயற்சியே இந்த உரையாடல் தொடர் நிகழ்வு. அமெரிக்காவில் வசிக்கும் அமெரிக்க இந்தியர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் விருந்தினர்களாகப் பங்கேற்று, தங்கள் வாழ்க்கைப் பயண அனுபவங்களை நெகிழ்வோடு பகிர்ந்து கொள்ளவார்கள். வர்த்தகம், கல்வி, அரசியல், கலை, சமூகம் என பல்வேறு துறைகளிலும் இந்திய அமெரிக்கர்களின் பங்களிப்பினை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் நிகழ்ச்சி இது.

  அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவில் ஜெட் உந்துசக்தி ஆய்வகத்தில் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டுப் பொறியியல் குழுவில் மேற்பார்வையாளராகப் பணியாற்றும் டாக்டர். ஸ்வாதி மோகன் பற்றி: நாசாவின் 2020 செவ்வாய் கிரக திட்டத்தில் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பிரிவின் தலைவராக பணியாற்றியவர். 2021 பிப்ரவரி 18 அன்று, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ரோவர் வாகனத்தை தரை இறக்கும் முயற்சியில் பெரும் பங்காற்றியதற்காக சர்வதேச அளவில் தலைப்புச் செய்தியானவர். அதற்காக, அமெரிக்க அதிபர் ஜோசப் பைடன் டாக்டர் ஸ்வாதி மோகனையும், அமெரிக்க அறிவியல், தொழில்நுட்பத் துறையில் இந்திய அமெரிக்கர்களின் பங்களிப்பினையும் பாராட்டினார். மேலும் விவரங்களுக்கு:https://mars.nasa.gov/people/profile/index.cfm?id=22937

  English summary
  U.S. Consulate General Chennai will begin a #DiasporaDiplomacy series by organizing a virtual conversation with Indian American Aerospace Engineer Dr. Swati Mohan on Wednesday, July 28 at 7 p.m. Dr. Swati Mohan is the Guidance, Navigation, and Control Systems Engineering Group Supervisor at NASA’s Jet Propulsion Laboratory (JPL). She led the Guidance, Navigation, and Controls Operations for NASA Mars 2020 mission.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X