சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த 7 கோடி மேட்டர் மட்டும் உண்மையாகி விட்டால்.. விஷால் ஜெயிலுக்கு போவது உறுதியாமே!

ரூ.7 கோடி கையாடல் நிரூபிக்கப்பட்டால் விஷால் சிறை செல்வார் என கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அந்த 7 கோடி மேட்டர் மட்டும் உண்மையாகி விட்டால்... வீடியோ

    சென்னை: விஷாலுக்கு டைம் சரியில்லை போல.. ஜெயிலுக்கு அனுப்ப தீவிரமாக முயற்சிகள் நடந்து வருவதாக பேச்சு அடிபடுகிறது.

    நேற்றைய தினம் விஷால் சம்பந்தப்பட்ட பிரச்சனை மேலோட்டமாக பார்த்தால் சினிமாகாரர்கள் பிரச்சனை போல தெரிந்தாலும், உள்ளூக்குள் அரசியலும் பொதிந்தே உள்ளதை அறியலாம்.

    கமலுக்கு முன்னரே நடிகர் விஷால் அரசியலுக்கு வருவார் என்ற செய்திகள் வெளியாகின. அதற்கேற்றபடிதான் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நுழைந்தார் விஷால்.

    பனிப்போர்

    பனிப்போர்

    ஆர்.கே.நகரில் இவரது சமூகத்துக்கு ஆதரவான ஓட்டுகள் நிறைய இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் கடைசி நேர குளறுபடிகளால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியாதபடி வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதற்கு அதிமுகவினரே காரணம் என்று சொல்லப்பட்டதால் விஷாலுக்கும் அதிமுகவுக்குமான பனிப்போர் அன்றே தொடங்கி விட்டது.

    அரசு மீது விமர்சனம்

    அரசு மீது விமர்சனம்

    இதனால் தமிழக அரசின் ஒவ்வொரு செயலையும் கவனித்தும், விமர்சித்தும் வந்தார் விஷால். இதே கடந்த நவம்பரில் கொடுங்கையூரில் 2 சிறுமிகள் மின்சாரம் தாக்கி இறந்ததற்கு, "அரசு நிர்வாகத்தின் தவறுக்கு இன்னும் எத்தனை அப்பாவி மக்கள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டும்? என கேள்வி எழுப்ப தொடங்கினார்.

    வியாபார அமைப்பு

    வியாபார அமைப்பு

    அதிமுகவுக்கு என சொந்தமாக நியூஸ் ஜெ என்ற செய்தி சேனல் தொடங்கப்பட்டபோது, "ஒரு செய்தி சேனல் ஆரம்பிக்க நிறைய செலவாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் மாதச்சம்பளம் வாங்கும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், எப்படி இதுபோன்ற ஒரு வியாபார அமைப்பை தொடங்க முடிகிறது? 2019-ம் ஆண்டுக்காகக் காத்திருக்கிறேன்" என்றார்.

    விஷமப்பயல்

    விஷமப்பயல்

    இதை கேட்டதும், அதிமுகவினர் கடும் கொந்தளிப்பு ஆனார்கள். இதற்கு கடந்த நவம்பர் 17-ம் தேதி அதிமுகவின் அதிகார நாளேடான நமது அம்மா நாளிதழில் கடுமையாக சாடி இருந்தது. ‘வி‌ஷமப்பயல்' மட்டும் வாழ்த்துக்கு பதிலாக வன்மத்தை கக்குகிறது. காசு ஏது என்று காழ்ப்புணர்ச்சி பேசுகிறது.

    பெரியவங்கள வர சொல்லு

    பெரியவங்கள வர சொல்லு

    சரி அதெல்லாம் போகட்டும்... நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து 7 கோடி ரூபாயை காணோம்னு கோடம்பாக்கமே உன்னை கொலை வெறியில் தேடுகிறபோது, உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை...போ... போ... வீட்ல யாராவது பெரியவங்க இருந்தா வரச்சொல்லு...." என்று விஷாலை சாடியிருந்தது. இந்த 7 கோடி பிரச்சனையை அப்போதே ஆளும் தரப்பு கிண்டி விட்டிருந்தது.

    கையை விரித்துவிட்டார்

    கையை விரித்துவிட்டார்

    இதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூவும், "எந்த அடிப்படையும் தெரியாமல் நடிகர் விஷால் பேசி வருகிறார், தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்வதில் கூட வழிமுறைகள் தெரியாமல் ஆர்.கே.நகரில் பெற்ற அனுபவத்தை மறந்து பேசுகிறார். இது விஷாலுக்கு நல்லதல்ல" என்று கூறியிருந்தார். இதே கடம்பூர் ராஜூதான் நேற்றைய பிரச்சனையின்போது அரசு விஷால் கைது விவகாரத்தில் தலையிட முடியாது என்று கையை விரித்துள்ளார்.

    உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின்

    அது மட்டும் இல்லை, இப்படி தொடர்ந்து ஆளும் தரப்பில் மோதி கொண்டே இருந்த விஷாலை, எந்த பிரச்சனை வந்தாலும் விட வேண்டாம் என்று ஆளும் தரப்பு தயாரிப்பாளர்களான ரித்திஷ் போன்றோரிடம் ஏற்கனவே சொல்லப்பட்டு வந்ததே இப்போதைய கைது வரை வந்துவிட்டது என்று கூறப்படுகிறது. மேலும் உதயநிதி ஸ்டாலின் எப்பவுமே விஷால் சப்போர்ட்தான். இதுபோதாதென்று சன்டிவியில் விஷால் ஒரு ப்ரோக்ரோமும் நடத்தியும் வருகிறார். இதெல்லாம் கூட ஆளும் தரப்புக்கு எரிச்சலை தந்ததாக சொல்கிறார்கள்.

    ரூ.7 கோடி

    ரூ.7 கோடி

    ஏற்கனவே தமிழ் தேசிய கட்சிகள் எல்லாம் விஷாலுக்கு எதிராக உள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கை சாதாரண ஒன்றாக இருக்காது என்றே கூறப்படுகிறது. அந்த 7 கோடி ரூபாய் கையாடல் மட்டும் என்பது உண்மையிலேயே நிரூபணமாகிவிட்டால், விஷாலுக்கு ஜெயில் கட்டாயம் என்றே கூறப்படுகிறது.

    English summary
    Pondy Bazaar police filed 2 case against Actor Vishal. It is reported that the arrest of Vishal's fraudulent Rs 7 crores is confirmed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X