சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரியர் மாணவர் தேர்ச்சி...ஏஐசிடிஇ உண்மையிலேயே ஏற்க மறுத்ததா.. குட்டையைக் குழப்புகிறாரா சூரப்பா!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள பி.இ. அரியர்ஸ் மாணவர்களின் தேர்ச்சிமுடிவை அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் ஏற்க மறுத்து இருப்பதாகவும், இதற்கான மின்னஞ்சல் தனக்கு வந்து இருப்பதாகவும் அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Arrear Exam ரத்து : சூரப்பாவுக்கு கேபி அன்பழகன் எதிர்ப்பு

    கொரோனா பொது முடக்கம் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால், கடந்த கல்வியாண்டுக்கான இறுதித் தேர்வை எழுத முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தேர்வு எழுதுவது குறித்து மாநிலங்களும் வெவ்வேறு முடிவுகளை அறிவித்து இருந்தன.

    Did AICTE Deny Tamil Nadu Govt Decision on Arrear Exams?

    தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்கள் அந்த கல்வியாண்டில் வாங்கி இருக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருந்தார். அதற்கு முன்பு 9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்குமாறு உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

    சரக்கு இருக்கு, குடிச்சுக்கங்க.. பஸ் ஓடலனு வராம இருக்காதீங்க, டூவீலர் கடன் வாங்கிட்டு வந்து சேருங்கசரக்கு இருக்கு, குடிச்சுக்கங்க.. பஸ் ஓடலனு வராம இருக்காதீங்க, டூவீலர் கடன் வாங்கிட்டு வந்து சேருங்க

    இதையடுத்து கல்லூரி இறுதியாண்டு தேர்வு தவிர மற்ற தேர்வுகளையும் தமிழக அரசு ரத்து செய்தது. இத்துடன் அரியர்ஸ் தேர்வு எழுதுவதற்கு பணம் செலுத்தி இருந்தாலே தேர்ச்சி அளிக்குமாறு முதல்வர் அறிவித்து இருந்தார். இதற்கு தமிழகம் முழுவதும் அரியர்ஸ் வைத்திருந்த மாணவர்களிடம் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டுக்கள் குவிந்தன. போஸ்டர்கள் அடித்தும் ஒட்டினர்.

    இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்த பி.இ. அரியர்ஸ் மாணவர்களின் தேர்வு முடிவை அகில இந்திய தொழில்நுட்பக் கல்லூரி ஏற்க மறுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் அனில் டி சஹஸ்ரபுத்தே அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் எம்.கே. சூரப்பாவுக்கு அனுப்பி இருக்கும் கடிதத்தில், ''முந்தைய தேர்வுகளில் தோல்வி அடைந்து இருக்கும் மாணவர்கள் தேர்வு எழுதாமலே தேர்ச்சி என்று அறிவித்து இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. தேர்வுகள் நடத்தாமல் தேர்ச்சி அளிப்பது, மதிப்பெண் அளிப்பது, டிகிரி அளிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த மாதிரியான மாணவர்களை உயர் கல்விக்காக எந்த பல்கலைக் கழகங்களோ அல்லது தொழில் நிறுவனங்களோ ஏற்றுக் கொள்ளாது'' என்று தெரிவித்துள்ளார்.

    தமிழக முதல்வரின் இந்த முடிவுக்கு அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமியும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். கல்வி தேர்ச்சி முடிவுகளில் அரசு தலையிடக் கூடாது என்று குறிப்பிட்டு இருந்தார்.

    English summary
    Did AICTE Deny Tamil Nadu Govt Decision on Arrear Exams?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X