"கல்பனா".. ஞாபகம் இருக்கா..பஸ்ஸிலேயே வந்து ஸ்டாலினை சந்தித்தாரே.. 1 கோடி ரூபாயாம்.. மேயர் மீது பகீர்
சென்னை: கோவையின் முதல் பெண் மேயர் மற்றும் திமுகவின் முதல் கோவை மேயர் என வரலாறு படைத்த, கல்பனா மீது, பகீர் புகார் ஒன்று எழுந்துள்ளது.. இதனால் கோவையே பரபரப்பாகி உள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், மற்ற பகுதிகளின் வெற்றியைவிட கொங்குவின் வெற்றியே திமுக தரப்பில் அதிகமாக ஈர்க்கப்பட்டது.
3 மணிநேரத்தில் மாற்றம்! அமைச்சரவைக்கு நோ சொல்லி துணை முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ்! பின்னணி என்ன?
ஓட்டுஎண்ணிக்கையின்போதே, கொங்குவில் அபார வெற்றி என்றதுமே, அடுத்த மேயராக திமுகவில் இங்கு யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது..

கொங்கு மண்டலம்
காரணம், இதுவரை பிற கட்சிகளை சேர்ந்தவர்கள்தான் கொங்குவில் மேயராக இருந்திருக்கின்றனதே தவிர திமுகவில் யாரும் மேயரானது இல்லை.. கோவை மாநகராட்சி மேயர் பதவியில் அமர்வதற்கான வாய்ப்பு இரண்டு முறை கிடைத்தும் அதனைக் கூட்டணிக் கட்சிக்கு விட்டுக்கொடுத்த திமுக தலைமை.. ஆனால், இந்தமுறை அதுபோல் செய்துவிடக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தது. இறுதியில், கோவை மேயர் வேட்பாளராக கல்பனா அறிவிக்கப்பட்டார்.

மேயர் கல்பனா
இதன்மூலம் கோவையின் முதல் பெண் மேயராகவும், திமுகவின் முதல் கோவை மேயராகவும் வரலாறு படைத்துள்ளார் கல்பனா.. இவர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ளவர் என்கின்றனர்... ஆனால், மிக எளிமையான குடும்பத்தை சார்ந்தவர் என்றார்கள்.. போதுமான வசதியின்மை காரணமாக, கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன், கழகத் தலைவரை சந்திப்பதற்காக சென்னைக்கு பஸ்ஸிலேயே வந்து சென்றவர் என்ற தகவலும் சோஷியல் மீடியாவில் வைரலானது..

போராட்டம்
அந்த அளவுக்கு எளிமையான பின்னணி கொண்டவர் மீது, இப்படி ஒரு பரபரப்பு புகார் கிளம்பி உள்ளது கோவையையே அதிர வைத்து வருகிறது. கோவை மாநகராட்சி கூட்டம் கல்பனா தலைமையில் நேற்றைய தினம் நடந்தது.. அப்போது திடீரென அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ஷர்மிளா சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்..

மேயர் வீடு
"மேயரின் வீட்டை அழகுபடுத்த ஒரு கோடி ரூபாய் நிதியா? ஊழல் நடக்குதுங்கோ, ஊழல் நடக்குதுங்கோ" போன்ற பதாகைகளை கையில் ஏந்தி தரையில் உட்கார்ந்து கோஷங்களை எழுப்ப ஆரம்பித்துவிட்டனர். உடனே, கூட்டத் தொடரை புறக்கணித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாமன்ற குழு தலைவர் பிரபாகரன் சொன்னதாவது:

டெக்கரேஷன்
"கோவை மாநகராட்சி மக்களை விரட்டி விரட்டி வாங்கிய வரிகளை, மக்களுக்காக பயன்படுத்தாமல், மேயர் தன்னுடைய வீட்டை அழகு படுத்துவதற்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.. கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக பராமரிப்பிற்கு ஒரு கோடி ரூபாய் நிதியும், மாநகராட்சி பிரதான அலுவலகம் கட்ட பராமரிப்புக்கு ஒரு கோடியும் ஒதுக்கி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்" என்றார். மேயர் தன்னுடைய வீட்டை அழகுபடுத்த ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது..

கல்பனா
இது தொடர்பாக கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "முதல்வர், அமைச்சர்கள், மேயர் உள்ளிட்டோருக்கு அரசு சார்பாக வீடுகள் ஒதுக்கப்படும்.. அந்த வகையில் கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் மேயர் கல்பனாவிற்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.. ஆனால், கடந்த 2016ம் ஆண்டிற்கு பிறகு அந்த வீடு பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து உள்ளது.. அதனால், அரசுக்கு சொந்தமான வீட்டை தான் பராமரிக்கப்படவும், சீரமைக்கவும் உள்ளது" என்றார்.